பக்கம்:சிவ வழிபாடு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் மாணிக்கவாசகர் THIRUWASAKAM MANICKKAWASAKAR (27) இறைவன் எல்லாப் பொருள்களாக இருக்கிறான் என்பர் சிலர், அப்பொருள்கள் அல்ல அவன் என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பொருள்களாக இருக்கிறான் என்பது அவனது சொரூப லக்ஷணம், அதாவது அவனது உருவநிலை. எப்பொருளாகவும் இல்லை என்பது அவனது உண்மைநிலை; அதை அருவநிலை என்னலாம். இத்தகைய இறைவனை நாம் ஏன் புகழவேண்டும்? இதுவும் ஒரு கேள்விதான். உலகத்தில் உள்ள தலைவர்களைப் புகழ்ந்து பாடுகிறோம் அல்லவா? எதற்காக? நாம் அவர்களுடைய அன்பைப் பெற்று வாழ்வதற்காக அதுபோலவே இறைவனது அன்பைப் பெற இறைவனை வாழ்த்துவது மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம். திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! Namachchivaaya vaazhga! naadhan thaall vaazhgal இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! |maippozhudhurn ennegnjil neenggaadhaan thaall vaazhgal கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க! Kõgazhi aannda gurumannithan thaall vaazhga! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! Aagamam aagi nindrru annnnippaan thaal vaazhga! ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க! Egan anegan irraivan adi vaazhga! "நமசிவாய" என்னும் திரு ஐந்தெழுத்து வாழ்க தலைவன் ஆகிய சிவபெருமானுடைய திருவடிகள் வாழ்க கண் இமைக்கும் அளவு நேரமும் என் மனத்தில் இருந்து நீங்காதவன் இறைவன்; அவருடைய திருவடிகள் வாழ்க! கோகழி என்பது திருப்பெருந்துறை அங்கு ஆட்சி செய்பவர் என் குருமணி, அவருடைய திருவடிகள் வாழ்க! ஆகமங்களின் பொருளாக இருப்பவர்-இனிமை தருகிறவர்- அவருடைய திருவடிகள் வாழ்க! ஒருவன் ஆகவும் பல ஆகவும் இருப்பவர் இறைவன் அவருட்ைய திருவடிகள் வாழ்க! 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/64&oldid=833637" இலிருந்து மீள்விக்கப்பட்டது