பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 டாக்டர் சி. ஆர். ரெட்டி யாகும். இடைக்காலத்தில் இவர்தம் மூதாதையர் சிறிய நாடு களே ஆண்டு அரசோச்சியவர்கள். உயர் மதிப்பு, தன்மானம் என்ற பண்புகள் இவர்களிடம் நன்கு வளர்ந்து துலக்கமடைந்து திகழ்கின்றன. உழவுத் தொழிலே இராமலிங்கா ரெட்டிக் குடும்பத்தின் முதன்மையான தொழிலாக இருந்தபோதிலும், அக்குடும்பம் பண்டைய இலக்கியப் புலமையையும் உரிமைகொள்ளக்கூடியதாக விளங்கியது. சிறப்பாக, சித்துார் மாவட்ட நடுத்தர செல்வக் குடும்பங்களைப் பொறுத்தமட்டிலும், இஃது உண்மையே யாகும். இவர்தம் பாட்டனர் (பாட்டனரின் திருப்பெயரே பே(பெய) ரனுக்கும் சூட்டப்பெற்றது) ஒரு கவிஞர். இவருடைய நூல்களில் நூறு செய்யுட்களைச் கொண்ட பாஸ்கர சதகம் அடங்கும். இராம லிங்கா ரெட்டியின் தந்தையார் சுப்பிரமணிய ரெட்டி வழக்கறி ஞர் தொழிலை மேற்கொண்டிருந்தார்; இவரைக் கவிஞர் என்பதை விட புலமையுடையவர் என்று சொல்லலாம். இவர் இரண்டு தொகை நூல்களை வெளியிட்டார். ஒன்று பாரதசார இரத்தின வளி; மற்ருென்று, பாகவதசார முக்தாவளி; இரண்டும் நீதி நெறியைச் சார்ந்தவையாக அமைந்திருந்தன. இவர் முதல் நிலை வழக்கறிஞர்; மிகவும் நேர்மையுள்ளவர் என்று புகழ் பெற்றிருந் தார். பெரும்பாலும் மகளிர் அடுப்படியில் அடைந்து கிடந்த அந்தக் காலத்தில் இவருடைய அத்தை மகள் ஒருத்தி வரதராச சதகம் என்ற பக்தி நூல் ஒன்றை இயற்றினர். தெலுங்கு மொழியிலமைந்த மகாபாரதம், பாகவதம், இராமாயணம் இவை இராமலிங்காரெட்டியின் குடும்பத்தில் படிக்கப் பெறும் நூல்களாக அமைந்தன. பிள்ளைப் பருவத்திலிருந்தே இவற் றுடன் இடைவிடாமல் பழக்கப்பட்டிருந்தமையால், இளமைப்பரு வத்திலிருந்த இராமலிங்கா ரெட்டி முக்கியமாக இவற்றுள் முதலாவதாகக் குறிப்பிட்ட மகாபாரதத்தில் ஈர்க்கப்பெற்ருன். பத்து வயதிற்கு மேற்பட்ட (இருபதிற்குக் குறைந்த) பருவத்திலேயே, இவன் தெலுங்கு மகாபாரதத்தைப் பலரும் போற்றத்தக்க முறை யில் எளிமையாகப் படிக்கும் திறனையும் எய்தியிருந்தான். தன் குடும்பத்தில் சிற்றன்னையரிடமிருந்தும் பாட்டிமார்களிடமிருந்தும் எண்ணற்ற கட்டுக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இவனுக்குக் கிடைத்திருந்தது. பன்னிரண்டு வயதிலேயே நூற்றுக்கு மேற்பட்ட கதைகளை இவன் அறிந்திருந் தான். எழுத்தறிவில் மட்டிலும் கல்வியும் பண்பாடும் அடங்கி யிருக்க முடியாது என்பது இராமலிங்கா ரெட்டியின் உறுதியான நம்பிக்கை யாகும். சிற்றுாரில் பெற்ற தொடக்கநிலைக் கல்வி நிறைவு பெற்றதும், இராமலிங்கா ரெட்டி சித்துார் நகரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில்