பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை வாழ்க்கை 9 சேர்ந்தான். அப்பள்ளியில் தெலுங்குப் பண்டிதராகப் பணியாற் வந்தவரும், இவன் குடும்பத்தின் நண்பருமான குப்பண்ண அய்யங் கார் என்பார் புரிந்துகொள்ள இயலாத கூறுகளடங்கிய தெலுங்கு இலக்கணம், சொல் வரலாறு, யாப்பிலக்கணம் ஆகியவற்றைச் சிறுவன் இராமலிங்கா ரெட்டிக்கு முறையாகத் தொடங்கிவைத் தார். இந்தத் தெலுங்குப் பண்டிதரிடம் இராமலிங்கா ரெட்டி கற்றவை காளோபாக்கியானம் (நிடத நாட்டு அரசனை நளன் வரலாற்றைக் கூறுவது), சர்வ லட்சண சாரம் (தெலுங்கு மொழி யின் விதிகளைப்பற்றிய அடிப்படை நூல்) என்ற இரண்டு நூல்க ளாகும். ரெட்டி பள்ளியில் அறிவுக்கூர்மையுள்ள மாளுக்கன்; சிறப்பாகத் தெலுங்கு, ஆங்கிலம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இவனது கூரிய திறன் வெளிப்பட்டது. அன்றும் பின் னரும் எண்கணக்குப் பாடம் பூச்சாண்டிகளைப்போல் இவனை வெருட்டும் தன்மையாகவே இருந்தது. 1890-ல் முதற் படிவத்தில் சேர்ந்து, 1896-ல் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ருன் சிறுவன் இராமலிங்கா ரெட்டி. தேர்வு கட்காக நெட்டுருச் செய்யும் பழக்கம் இவனிடம் இயல்பாகவே அமையவில்லை. திருமதி பெஸ்சண்ட் அம்மையாரின் சொற்பொழிவு களால் பொதுமக்களிடையே பரவச் செய்யப்பெற்ற பிரம்ம ஞான gués à96) (Theosophical movement) @orenuou?Gav ostillou அக்கறை இவனுடைய பள்ளிப் பாடங்களைப் பயில்வதினின்றும் கவனத்தைத் திருப்பியது. கிட்டத்தட்ட இறுதிக் காலத்தில், குறைந்த தயாரிப்பைக் கொண்டே, தேர்வுகளில் நல்ல முறையில் வெற்றி பெற்றே வந்தான். பள்ளியிறுதிப் படிப்பை முடித்த நிலையி லேயே பிறருடைய கவனத்தைக் கவரும் முறையில் ஆற்ருெழுக் காக ஆங்கில மொழியில் பேசும் திறனும் தெலுங்கு மொழியில் செய்யுளியற்றும் திறனும் இவனிடம் அமைந்துவிட்டன. குறுகிய சித்துார் எல்லைக்கப்பாலும் நோக்கக்கூடிய அளவுக்கு இவன் தன் திறன்களை நன்கு வளர்த்துக்கொண்டான்.