பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் மூன்று சென்னையிலும் கேம்பிரிட்ஜிலும் அக்காலத்தில் தென்னுட்டில் பல இளைஞர்களைப் போலவே, கல்லூரிப் படிப்பிற்காக இளைஞன் இராமலிங்கா ரெட்டியும் சென்னையை நோக்கிச் சென்ருன். கலந்து பழகும் சமூக வாழ்க் கைக்கு வாய்ப்பு தருவதிலும், கல்வி புகட்டும் தரத்திலும் பெரும் புகழ் பரப்பிய சென்னைக் கிறித்தவக் கல்லூரி இவனுடைய கவனத் தைக் கவர்ந்தது. இக்கல்லூரி ஸ்காட்லாந்து பணிமன்றத்தின ரால் நடத்தப்பெற்று வருகின்றது; நாட்டில் மிகப் பழமையான கல்லூரிகளில் இஃது ஒன்ருகும். அக்காலத்தில் டாக்டர் வில்லியம் மில்லர் என்பார் கல்லூரியின் முதல்வர்; பிறரை எளிதில் ஈர்க்க வல்ல தனியுரிமையுள்ள காந்த ஆற்றலைக் கொண்ட சேவையே உருவான ஆசிரியர் இவர். இளம் மாளுக்கர்களின் மனத்தில் ஒழுங்கு முறை, கடும் உழைப்பு இவற்றுடன் தன்னம்பிக்கையையும், சுயமாக வெளியிடும் ஆற்றலையும் ஊட்டி வளர்ப்பதில் டாக்டர் மில்லர் பொறுப்புடை யவராக இருந்தார். இவருடைய ஆளுமையால் இராமலிங்கா ரெட்டி பெரிதும் மாற்றம் அடைந்தான். கெல்லெட் என்ற வர லாற்றுப் பேராசிரியர் இவனுக்குத் தம் பாடத்தில் ஆழ்ந்த பற்றை உண்டாக்குவதில் துணைபுரிந்தார். மிக அதிகமான நிலை யான முத்திரையை இவனிடம் பதியச்செய்தவர் டாக்டர் ஸ்கன்னர் என்பார்; இவர் மெய்விளக்கப் பாடத்தைப் புகட்டி முதல் (அடிப்படை) விதிகளைப்பற்றிய ஆழ்ந்தாராய்ச்சி உணர்வை இவ னிடம் தூண்டிவிட்டார். கற்பிக்கும் ஆசிரியர் குழாத்தில் இந்தியர்களிலும் சிலர் புலமைக்கும் மாளுக்கர்களின் நலனில் அன்புடன் காட்டும் பரி வுக்கும் புகழ் வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். கல்லூரியின் தெலுங்கு மன்றமாகிய ஆந்திர பாஷாபி ரஞ்சனி சங்கத்தின் தலை வரான சாமர்த்தி ரங்கய்ய செட்டி என்பார் ரெட்டி மேற்கொண்ட இலக்கிய நடவடிக்கைகளுக்குப் பேரளவில் உற்சாக மூட்டுவதில் முதல்வராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் பெரும் தெலுங்குப் புலவரும், நாடக ஆசிரியருமான வேதம் வெங்கட்டராய