பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையிலும் கேம்பிரிட்ஜிலும் 11 சாஸ்திரி கல்லூரியின் வடமொழிப் பண்டிதர்; தெலுங்கு மொழி யை இரண்டாவது மொழியாகப் பயின்ற ரெட்டிக்கு இவருடைய வழிகாட்டும் அறிவுரை என்றும் நிரந்தரமாகவே கிடைத்திருந் தது. ஆந்திர பாஷாபி ரஞ்சன சங்கத்தின் நடவடிக்கைகளில் ரெட்டி சுறுசுறுப்பான அக்கறையுடன் செயற்பட்டான். இதன் சார்பில் ஏற்பாடு செய்யப்பெற்ற சொற்போர்கள், பிற நிகழ்ச்சிகள் இவற்றில் கலந்துகொள்வதில் ரெட்டி உற்சாகம் காட்டினன். இதன் சார்பில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பங்கு கொண்டு முசலம்ம மரணமு என்ற தன் கவிதையை அனுப்பி அதற்குப் பரிசும் பெற்ருன். கல்லூரியில் ஆங்கில மொழியிலும் தெலுங்கு மொழியிலும் நகைச்சுவைத் திறனுடனும் சொற்சுவைத் திறனுடனும் பேசவல்ல பேச்சாளன் என்ற புகழ்க்குறியுடன் திகழ்ந்தான் இராமலிங்கா ரெட்டி. நாட்டுப்பற்ருளர் லோகமானிய பாலகங்காதர திலகர் அரசினரால் சிறைப்பட்ட பொழுது மாணவர் சமுதாயத்தின் பரிவினை எடுத்துக்கூறும் முறையில் முதற்படியை மேற்கொண்டான் ரெட்டி. தான் கல்லூரியில் கழித்த ஐந்தாண்டுக் காலத்தில் இராம லிங்கா ரெட்டி திறனாய்வுத் திறனிலும் படைப்பாற்றல்களில் வல்ல வன் என்பதற்கும் மிகுதியான சான்றுகளைக் காட்டினன். மகாபார தத்தில் தொடர்ந்து மாருத பற்றுறுதியுடனிருக்கும் பொழுதே, சிற்றிலக்கியக் கவிஞராகிய பிங்கோலி குரண்ணுவின் படைப்பின் மீது இவனுடைய கவனம் ஈர்க்கப்பெற்றது. சிறப்பாக இவர்தம் கலாபூர்ளுேதயமு என்னும் நூல் ரெட்டியின் மனத்தில் ஆழ்ந்த முத்திரையைப் பதித்தது. 1899-ல் ஆந்திர பாஷாபி ரஞ்சனி சங்கத்தில் தான் படித்த ஆய்வுக்கட்டுரையொன்றில் இந்நூலின் நிறைகளையும் குறைகளையும் சற்று விரிவாகவே சோதித்துக் காட் டினன். இதுதான் இவனுடைய இலக்கியத் திறய்ைவுக்குப் பெரி தான படைப்பின் தொடக்கம் ஆகும்; இது பிற்காலத்தில் பெருக் கப்பெற்று கவித்துவ தத்துவ விசாரமு' என்ற தலைப்பில் நூல் வடிவாக வெளியிடப்பெற்றது. வரலாறு, மெய்விளக்கம் (தத்துவம்) இவற்றில் தனிச்சிறப் புடன் பி.ஏ. பட்டம் (1902-ல்) பெற்ற பிறகு, இங்கிலாந்தில் மேற்படிப்பிற்காக இந்திய அரசின் உதவிச் சம்பளம் ரெட்டிக்குக் கிடைத்தது. இவன் கேம்பிரிட்ஜில் புனித ஜான் கல்லூரியில் சேர்ந்தான்; விரைவில் அங்குக் கண்காட்சி-ரைட் பரிசினை முயன்று பெற்ருன். மேலும் இவன் பவுண்டேஷன் ஆய்வு மாணுக்களுன்ை. வரலாற்று டிரிப்பாஸ் (HistoryTripos) என்ற கேம்பிரிட்ஜில் நடை பெறும் தேர்வுக்குப் பயிலும்போது வரலாற்றுப் பாடத்தைத்