பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 டாக்டர் சி. ஆர். ரெட்டி தவிர பொருளியல், மெய்விளக்கம் (தத்துவம்) என்ற பாடங்களும் இவனது தனி ஆர்வத்திற்கு உட்பட்டன. சுயசிந்தனைக்கும், அரசியல் பரந்த நோக்கிற்கும் வாய்ப்புகள் கொண்ட கேம்பிரிட்ஜில் நிலவிய சூழ்நிலை ஆய்வு மனங்களைக் கொண்டவர்கட்கும், உரிமையை வற்புறுத்துபவர்கட்கும் மேலும் வளர்ச்சி பெறத் துணை செய்வதாக அமைந்தது. 1905-ல் இராம லிங்கா ரெட்டி கேம்பிரிட்ஜ் முற்போக்குச் சங்கத்திற்குச் செயல கைத் தேர்ந்தெடுக்கப்பெற்ருன். இதனைவிட மேலும் உயர்ந்த பதவி இவனைத் தொடர்ந்தது: கேம்பிரிட்ஜ் மாணவப் பேரவைக்கு துணைத் தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்ருன். இந்தப் பத விக்குத் தற்செயலாக முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற இந்தியன் இவனேயாவான். (பல பத்தாண்டுக் காலத்திற்குப் பிறகு மோகன் குமாரமங்கலம் இந்தப் பேரவைக்குத் தலைவனுகத் தேர் தெடுக்கப்பெற்ற முதல் இந்தியன் என்பது குறிப்பிடத்தக்கது). ரெட்டி கேம்பிரிட்ஜில் வாழ்ந்த காலத்தில் மாளுக்கர்களி லும் ஆசிரியர்களிலும் புகழ் வாய்ந்தவர்கள் அங்கு இருந்தனர். ஆசிரியர்களில் கோல்ட்ஸ்வொர்த்தி லோவெஸ் டிக்கின்சன்,டேவிட் மேக்டக்கார்ட்டு போன்ற சுயசிந்தனையுள்ள பெருமக்கள் புதிய சிந்தனைக்கு வழி வகுத்துக் காட்டினர். பின்னர் புளும்ஸ்பரி குழு’ என்று வழங்கப்பெற்ற குழுவின் உட்பகுதியாக அமைந்தவர்களில் லிட்டன் ஸ்ட்ரேச்சி, லியனர்டு வுல்ப், இ.எம். ஃபாரஸ்டர், கிளைவ் பெல் முதலியோர் ரெட்டியின் அடுத்த சம காலத்தவர்களாவர். ஜான் மேய்னர்டு கெய்னிஸ், மார்க்கன் ஃபிலிப்ஸ் பிரைஸ், ஜே.சி. ஸ்குயர் ஆகியோர் இவனது நெருங்கிய நண்பர்களாவர். மேலும், இவன் பாவிஸ் பிரதர்ஸ், லேவெலின், ஜான் கெளபர் போன்ற வேறு அ றி வா ற் ற லு ள் ள வ ர் க ளே யும் வளரும் எழுத்தாளர்களையும் சந்தித்து அளவளாவுவதுண்டு. அறிவாற்றலுள்ளவர்களிடையே நடைபெறும் உரையாடல் எல்லா வகையிலும் அறிவுச் சுடர்களுடன் திகழ்ந்திருக்க வேண்டும்; இது மின்வெட்டு போன்ற செயல்விரைவுடன் நகைச்சுவைத் திற னில் திளைக்கும் ரெட்டியிடமிருந்து மிக உயர்ந்தவற்றை எல்லாம் வெளிக் கொணர்ந்திருக்க வேண்டும். பூவுலகிலுள்ள எந்தப் பொருளும் இங்கு விலக்கு அன்று. மேலுலகிலுள்ளவையும் அப் படித்தான். கடவுளையும் விட்டபாடில்லை. சுடர்விடும் ஒளியுடன் திகழ்ந்தால் கடவுளைப் பழித்துரைப்பதும் சரியென்றே கொள்ளப் பெறும். இவனது பேச்சில் சுருக்கென்று தைக்கும் சொற்றிறத் துக்கு மாதிரி இது: கடவுள் எல்லாவல்லமையும் படைத்தவர்! என்றும் இருப் பவர்! உண்மையே! கடவுள் எல்லாவல்லமையும் படைத்தவ ரானல், தற்கொலை செய்துகொள்ளக்கூடிய தன்னுரிமையும்