பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையிலும் கேம்பிரிட்ஜிலும் }3 விருப்பாற்றலும் அவருக்கு இல்லையா? அங்ங்னமாயின் அவர் எப்படி என்றும் நிலைத்திருக்க முடியும்? இத்தகைய போக்கில் ஒளிவீச்சும் பொருத்தமற்ற தன்மை யும் காணப்பேற்ருல், நாம் சிந்திக்க முனைவதுபோல் இவன் எடுத்த தெற்கெல்லாம் குறை கூறுபவன் அல்லன், இரக்கமற்றவனும் அல்லன். இவன் மகிழ்வூட்டுபவனுகவும் கலந்து பழகும் தன்மை யுள்ளவனாகவும் இருந்ததுடன் தோழமையுடன் பெருந்தன்மை யுடனும் திகழ்ந்தான் என்பதற்கு உயர்ந்த சான்றும் உள்ளது. மிகச் சிறந்த எல்லோரும் அறிந்த எழுத்தாளரான சர் ஜான் ஸ்குயர் என்பார் தம்முடைய கல்லூரி நாட்களை நினைவூட்டுபவ ராய்ச் சொன்னது: கேம்பிரிட்ஜில் ரெட்டி...பர்க்கின் சொல் வன் ைம யும் அநுபவ அறிவும் கொண்டு திகழ்ந்தான். ஆனல் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக பாராட்டப்பெற்ருலும் அல்லது நன்கு மதிக்கப்பெற்ருலும் இவனுடைய சொல் வன்மைக்கோ அல்லது அநுபவ அறிவுக்கோ இவன் விரும் பப்படுபவன் அல்லன். இதயத்தின் பண்புகளே இதயத்தின் துலக்கத்தை வெளிவரச் செய்யும்; கேம்பிரிட்ஜில் எங்களுள் பலரை ரெட்டியிடம் அன்புக்குரியவராக்கியது இவனது அறிவு அன்று; ஆனால் இவனது பெருந்தன்மை, குறிக்கோள் நெறி (முற்றிலும் தருக்குடைமை கலவாதது), இவனுடன் அறிமுகமானவர்களில் மிகக் குறைந்த அறிவுள்ளவரிடம் கூடக் காட்டும் அன்பான தற்பெருமையற்ற மகிழ்ச்சி, இவனது பொறுமை, பொறுத்துக்கொள்ளும் தன்மை ... ஆகிய பண்புகளடங்கிய இவனேதான். மிக அண்மைக்காலத்து மேட்ைடுச் சிந்தனையிலும், பல்கலைக் கழகத்திலும் வெளியிலும் ஆங்கில அறிவாற்றலுள்ளவர்களின் கூட்டுறவிலும் ஆழ்ந்து அடங்கியிருந்தபோதிலும், ரெட்டி தன் னுடைய மூலாதாரத்தை என்றும் மறந்ததே இல்லை. புதிய நுண் புலன்களைக் காண்பதற்காகத் தெலுங்கு மகாபாரதத்தை விடாது பயின்றும் ஆழ்ந்து மறைந்து கிடக்கும் அழகுகளைத் தேடிக் காண் பதற்காக கலாபூர்ளுேதயமு என்ற நூலில் தோய்ந்தும் தன்னுடைய தெலுங்குப் புலமைக்குப் புத்துயிர் ஊட்டிக்கொண்டேயிருந்தான். இங்கிலாந்தில் தான் தங்கியிருந்த ஐந்தாண்டுக் காலத்தில், ரெட்டி தன்னுடைய அரசியல் ஒத்துணர்வுகளையும், நாட்டுப் பற்றின் சார்புகளையும் நற்பயனுக்காகப் பயன்படுத்தினன். பல் கலைக்கழக முற்போக்குச் சங்கச் செயலன் என்ற முறையில் தேர்தல் கூட்டங்களில் இவன் அதிகமாகத் தேவைப்பட்டான். கேம்பிர்ட்ஜ் பேரவைக்கு லஜபத் ராய், கோகலே போன்ற இந்தியத் தலைவர்