பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர் சி. ஆர். ரெட்டி களை இவன் விருந்துப் பேச்சாளர்களாக அழைப்பதுண்டு. சிறப் பாக, கோகலேயின் ஆளுமையால் இவன் பெரிதும் கவரப்பெற்ருன்; இவருடைய முதிர்ந்த அரசியலறிவு, இனிய விட்டுக் கொடுக்கும் தன்மை, பேச்சில் நிதானப் போக்கு ஆகியவை ரெட்டியிடம் நிலையான முத்திரையை விட்டுச் சென்றன. கோகலேயின் அறிவுரைப்படிதான் ரெட்டி சட்டப்படிப்பை மேற்கொள்வதாக இருந்த தன் எண்ணத்தைக் கைவிட்டு அதற் குப் பதிலாக ஆசிரியத் தொழிற் படிப்பை ஏற்க முடிவு செய்தான். 1906-ல் இவன் வரலாற்று டிரிப்பாஸ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ருன். இந்தியாவிற்குத் திரும்புவதற்கு முன்னர் கல்வி நிலையங்களைப் பார்வையிடுவதற்காகவே அமெரிக்க ஐக்கிய நாட் டிற்கு சென்றுவந்தான். மாறுதல் விரும்பாத ஆங்கில மரபின்வழி வளர்க்கப்பெற்ற ஒருவனுக்கு இப்பயணம் பழைய பார்வையில் புதிய உலகினைக் காண்பதில் புத்துணர்வுட்டும் அநுபவமாக இருந்தது. தன்னுடைய நாட்டை ஒரு புதிய முறையில் அமைக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்ட பூரீ சாயாஜி ராவ் என்ற பரோடாவின் கெயிக்வார் அரசர் தம்முடைய பணியில் துணை செய்வதற்கு நன்கு பயிற்சி பெற்ற திறமை மிக்க ஒருவரைத் தேடியவண்ணம் இருந்தார். சில ஆண்டுகட்கு முன்னரே, கிளர்ந் தெழுந்த நாட்டுணர்ச்சி என்ற அலை உரிமை கொள்வதற்கு முன்னர், கல்லூரியின் துணை-முதல்வராக உயர்ந்த அரவிந்த கோஷ் என்பாரின்மீது இவர் விருப்பம் விழுந்தது. இப்பொழுது அவ்விருப்பம் இராமலிங்கா ரெட்டியின்மீது திரும்பியது. இயல் கான்கு பரோடாவிலும் மைசூரிலும் 1908-ல் இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு கெயிக்வாரின் அழைப்பின்பேரில் ரெட்டி பரோடா கல்லூரியில் சேர்ந்தார். உண்மையில், அவ்விருப்பறிவிப்பு வெளிநாட்டிலிருந்து திரும்பும் இவர் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. ரெட்டியின்