பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரோடாவிலும் மைசூரிலும் 15 அமெரிக்கச் சுற்றுப்பயணத்திற்கு பரோடா அரசர்தான் பண உதவி செய்ததாக அறியக் கிடக்கின்றது.கல்கத்தாவில் புதிதாகத் தொடங் கப்பெற்ற தேசியக் கல்லூரியின் முதல்வர் பதவியை மேற்கொள் வதற்காக அரவிந்தகோஷ் தம்முடைய துணை-முதல்வர் பதவி யைத் துறந்ததால் ரெட்டி கோஷாக்குப் பிறகு அக்கல்லூரியின் பேராசிரியராகவும் துணை-முதல்வராகவும் பதவியேற்ருர். தகுதி வாய்ந்த கேம்பிரிட்ஜ் பட்டதாரி ஒருவர் தகுதி வாய்ந்த மற் ருெரு கேம்பிரிட்ஜ் பட்டதாரியை அடுத்துப் பதவியை ஏற்பது எல்லாவற்றிலும் மிகப் பொருத்தமாக அமைந்தது. கூர்ந்து உண ரக்கூடிய அரசர் இவரைவிடச் சிறந்த ஒருவரை அந்த இடத்தில் அமர்த்த எண்ணியிருந்திருக்க முடியாது. பரோடாவில் ரெட்டி தங்கியது மிகக் குறைந்த காலமே யாகும். ஆனால், இவர் அங்கு உடனடியாகச் சிறந்த ஆசிரியர் என்ற பெயர் பெற்ருர். தாம் கற்பித்த எந்தப் பாடத்திலும் ஆங்கில இலக்கியம், ஐரோப்பிய வரலாறு, அல்லது பொருளியல் இவற்றுள் எதுவாயினும், புதியதோர் அணுகு முறையை மேற் கொண்டார் ரெட்டி. இவர்தம் சிந்தனையின் புதுமையாலும், விளக்கவுரையின் தெளிவாலும் மாளுக்கர்கள் உற்சாகத்தால் துாண்டப்பெற்றனர். இவருக்குமுன் பதவி வகித்த பெரியாரை விட ஆழ்ந்த அறிவில் சற்றுக்குறைவாக இருந்தாலும், இவரு டைய முறையில் மிகவும் அன்பாதரவுடன் இருக்க முடிந்தது. காலஞ்சென்ற கே. எம். முன்ஷி பரோடாவில் தம்முடைய மாணவ நாட்களை நினைவுகூருங்கால், தாம் ரெட்டியின் வகுப்பிற்கு உரியவ ரல்லாவிடினும், இன்பத்தின் பொருட்டு ரெட்டியின் சொற்பொழிவு களைக் கேட்பதுண்டு என்று குறிப்பிட்டுள்ளார். இங்ங்ணம் மந்திர ஆற்றல் வாய்ந்த ரெட்டியின் பேச்சு மொழியால் ஈர்க்கப் பெற்ற பல்லோருள் இவரும் ஒருவராவார். மீண்டும் கெயிக்வார் அவர்களின் வேண்டுகோளின்படி ரெட்டி மேற்கொண்ட கல்விச் சுற்றுப் பயணத்தில் கனடா, ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ் முதலான நாடுகட்குச் சென்று திரும் பினர். ஆனால் இவர் பெற்ற அநுபவத்தின் பயன் அதிகக் காலம் பரோடாவிற்கு மட்டிலுந்தான் என்ற வரையறை செய்துகொள்ள இயலவில்லை. 1909-ல் மைசூரில் பல்கலைக் கழகச் சீர்திருத்தம் என்ற பொருளில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு அழைக்கப்பெற்ருர் ரெட்டி. சர். வி.வி. மாதவ ராவ் என்ற அந் நாட்டின் திவான் இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டு அவற் ருல் மிகவும் கவரப்பெற்ருர், மைசூர் நாட்டு அரசுப் பணியில் சேருமாறும் ரெட்டியைத் தூண்டுதல் செய்தார். மைசூரில் மகாராசர் கல்லூரில் ரெட்டி பேராசிரியராகப் பணியாற்றியபொழுது, இவருடைய காலத்தில் எந்த ஒரு பேராசிரி