பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 டாக்டர் சி. ஆர். ரெட்டி யரிடமும் இல்லாத அல்லது இருக்க முடியாத அளவுக்கு மாணவர் களின் கவர்ச்சி மையமாகத் திகழ்ந்தார். இவர் ஆங்கிலம், வர லாறு, அளவை நூல் (Logic) ஆகிய பாடங்களைக் கற்பித்தார். ஆளுல் இவருடைய சொற்பொழிவுகள் யாவும் பலரும் செல்லும் வழியை விட்டு விலகியே நடைபெற்றன. இவை மாளுக்கர்களைத் தாமாகவே சிந்திக்கத் துணை செய்தன. சராசரிக்குமேல் அறி திறன் ஈவினைக் (I. இ) கொண்டவர்களிடம் இவை புலனுணர்வுக் கதவுகளைத் திறந்துவிட்டன. வழக்கமாகக் கிடைக்கும் சொற்பொழிவுகளாலும் முன்னமே செரிமானம் செய்யப்பெற்ற குறிப்புகளாலும் சோர்வுற்றவர்கட்கு இவரது கற்பிக்கும் முறை காற்ருேட்டமில்லாத நாளன்று வரும் இளந்தென்றலின் அலைபோல் வந்தது என்று இவரது பழைய மாளுக்கர்களில் சிலர் சொன்ன குறிப்பு பதிவேடுகளிலும் இடம் பெற்றுள்ளது. ரெட்டி வகுப்புக் குறிப்புகளை எழுதிக்கொள்ளு மாறு சொல்லுவதுமில்லை; சாரமற்ற பழக்கத்தை மேற்கொள்ள அவர்கட்கு எழுச்சியூட்டுவதுமில்லை. எந்தவிதமான பாலூட்டுமுறைக்கும் (Spoon-feeding) இவர் எதிர்ப்பு தெரிவிப்பவ ராக இருந்தார். வரலாறு செல்திசையைப் புரிந்துகொள்ளவும் அதனை ஆய்ந்து தேடவும் மாளுக்கர்கள் செலுத்தப்பெற்றனர். "ஸ்பெக்டடர்" என்ற இதழில் வெளியாகும் கட்டுரைகளை ரெட்டி மாளுக்கர்கட்குப் படித்துக் காட்டும்பொழுது அடிசனின் நாகரிகப் பண்புடைய நகைச்சுவைத் திறத்தை இவர்கள் திரும்ப அறிவது இவர்கட்கு அது ஒர் இன்ப மயமான வியப்பாக இருந்தது. மிகை யான புன்முறுவல் தவழும் முகபாவனை தெரியும்படியாக இவர் தமது குரலே ஒழுங்குபடுத்திக்கொள்வார். காய்ந்த எலும்பு போன்ற சுவையற்ற மரபொழுங்கு சார்ந்த அளவையியலும் (Logic) இவரிடம் உயிர்ப்பு பெற்று இளம் மாளுக்கரிடம் தனிக் கவ னத்தை எழுப்பி விடும். தனிமையில் இவர்களிடம் இவர் அளவை யியல் என்ற அறிவியல் மனிதனுடைய பகுத்தறிவாராய்ச்சியின் எல்லையைக் காட்டக்கூடியது என்று அடிக்கடிச் சொல்லுவதுண்டு. எங்ங்னம் 'பத்துக் கட்டளைகள்' ஒருவரை ஞானியாக்க முடியா யாதோ அங்ஙனமே அளவையியல் ஒரு மனிதரை நிறைவுடையவ ராக்க முடியாது என்பது இவர்தம் நம்பிக்கையாகும். மைசூரில் தங்கியிருந்த தொடக்கக் காலத்தில் இளவரசர் ஐரோப்பா சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது அவருடன் சென்று வருமாறு ரெட்டி பணிக்கப்பெற்ருர். இந்த வாய்ப்பினே ரெட்டி பல்வேறு நாடுகளிலுள்ள கல்வி நிலையங்களைப் பார்த்து வருவதற்குப் பயன்படுத்திக்கொண்டார். இந்த வாய்ப்பைப் போலவே கீழ்நாடுகட்கு மேற்கொள்ளப்பெற்ற சிறு தொலைப் பயணத்தில் கிடைத்த வாய்ப்பையும் பயனுறப் பயன்படுத்திக்