பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரோடாவிலும் மைசூரிலும் 17 கொண்டார் ரெட்டி. இத்தகைய விரிவான சுற்றுப் பயணங்கள் பற்றி இவர் அரசுக்குமுன் வைத்த அறிக்கையில் கீழ்நாடுகளிலும் மேல் நாடுகளிலும் கண்ட கல்வி ஏற்பாட்டு முறைமைகளில் மிகச் சிறந்தவை அடங்கியிருந்தன. 1915-ல் மைசூருக்கு ஒரு தனிப் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் திட்டமொன்று தயாரிக்கு மாறு இவர் கேட்டுக்கொள்ளப்பெற்றபோது இந்த அறிக்கை அதற்கு ஒரு பீடிகையாக அமைந்தது. அடுத்த ஆண்டே கற்பிப்பதற்கும், ஆராய்ச்சிக்கும், கல் லூரிகளைக் கிளை நிலையங்களாக இணைத்துக்கொள்வதற்கும் உரிய வாய்ப்புத் திறங்களுடன் அமைந்த ஒரு பல்கலைக்கழகம் தோன்றி யது. மகாராசர் கல்லூரியின் முதல்வராக ரெட்டி உயர்த்தப் பெற்ருர், இந்தப் பதவியில் இவர் இரண்டாண்டுகள் (1916-17) பணியாற்றினர். சில பழைய துறைகளைத் தற்காலப் புதுமை தோன்ற அமைத்ததுடன் இந்திய மொழிகளில் புதிய துறைகளைத் தொடங்குவதற்கும் இவர் முதற்படியை மேற்கொண்டார். கல் லூரியில் தெலுங்குத் துறையின் தொடக்கம் இவரது அரிய முயற்சியா லேற்பட்டதாகும். தெலுங்குப் பண்டிதர் பதவிக்கு முதற் பொறுப்பாளராக அமைந்தவர் திரு. ஆர். அனந்த கிருட்டிணசர்மா என்பவர்; இவர் பிற்காலத்தில் குற்றஞ் சாற்ற முடியாத நேர்மையுடைய புலவராகவும், திறனாய்வாளராகவும் தம் புகழை வளர்த்துக்கொண்டார். தமக்குச் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் ரெட்டி இவருடன் சேர்ந்து தெலுங்கு மகா பாரதத்தைப் படிப்பதை மேற்கொண்டார். 1918-ல் நாற்பது வயது எட்டாத இராமலிங்கா ரெட்டி மைசூர் அரசு முழுவதற்கும் கல்வித்துறைக் கண்காணிப்பாளர் களின் தலைவராக நியமிக்கப்பெற்ருர். ஓர் இந்தியருக்கு, அதுவும் வெளி மாநிலத்தைச் சார்ந்த ஒருவருக்கு, இஃது ஒரு சாதாரண மேதகைமை அன்று. இவருடைய வயதுக்குரிய ஒருவருக்குக் கூருணர்வுடைய துறையைத் தலைமைப் பொறுப்புடன் நடத்திச் செல்வதென்பது ஒரு சாதாரண பொறுப்பும் அன்று. தம்முடைய புதிய பொறுப்பில் பாதுகாப்பாகக் காலந் தள்ளலாம் என்று ரெட்டி அதனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வில்லை. கல்வித்துறை அமைப்பையே அதன் பழைய தடத்தி னின்றும் வெளிக்கொணர ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று இவர் உறுதி கொண்டார். பள்ளியே இல்லாத ஒவ்வொரு சிற்றுாரிலும் ஒரு பள்ளியைத் தொடங்க உடனடியான நடவடிக் கைகளை எடுத்தார். கல்வி' என்ற தலைப்பில் கணிசமான அள விற்கு மானியங்களை அதிகரிக்கவும் அதிகமான முயற்சியை எடுத் தார். எல்லாப் பள்ளிகளையும் அரிசனங்கட்குத் திறந்துவிட ஏற்பாடு செய்ததே இவர் மேற்கொண்ட இனவெழுச்சியுள்ள