பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 டாக்டர் சி. ஆர். ரெட்டி நடவடிக்கையாகும். ஒரு சிறிய எல்லையிலாவது தீண்டாமையை ஒழிக்க மேற்கொண்ட தொடக்க கால முயற்சிகளில் இஃது ஒன்ருக அமைந்தது. இதனைச் செய்ததால், சிறப்பாக மிக உயர்ந் இடங்களிலிருந்து ஏராளமான எதிர்ப்புகளை நேர்நின்று சமா ளிக்க வேண்டியிருந்தது. ஆனல் இறுதியில் சட்டமன்ற உறுப்பி னர்களின் துணையையும், அரசரின் பரிவையும் கொண்டு இவர் வெற்றியே பெற்ருர். மைசூரில் இராமலிங்கா ரெட்டியின் ஒவ்வொரு செயலும் ந ன் ரு க ச் சென்றுகொண்டிருந்ததாகவே காணப்பெற்றது. மாணுக்கர்களிடையே பெரும் புகழையும் துறையில் செயலாற்றிய தெள்ளிய நிலைச்சான்றுடனும், மிக உயர்ந்த பதவியை வகிக்கும் பேறும் பெற்ருர். இவர் குறை கூறுவதற்கு ஒன்றுமே இல்லை. 1921-ல் ஒரு நாள் காலையில் இவர் திடீரென்று தம் பதவியைத் துறந்தார். மின்னது இடித்தது போன்று இச்செய்தி மக்களுக்கு எட்டியது. தம்முடைய தாய்நாடாகிய சென்னை மாநிலத்தில் அரசியலில் தம்முடைய எதிர்பாரா நற்பேற்றினைக் குறித்து முயல லாம் என்பதற்காகவே இங்ங்னம் செய்தார் என்று சிலர் சொல் லினர். வேறு சிலர் பல்வேறு கதைகளைக் கட்டிவிட்டனர். ஆளுல் மைசூரினின்றும் திடீரென்று நாடகப் பாங்கில் வெளியேறின செய்தி இன்னும் விளங்காப் புதிராகவே மறைந்து கிடக்கின்றது. இவரது மைசூர் வாழ்க்கையில் இரண்டு நிகழ்ச்சிகள் குறிப் பிடத் தக்கவையாகவே அமைந்தன. ஒன்று: மகாத்மா தீண்டாமை ஒழிப்புப் பணியைத் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்த்தே அரிசனங்களுக்கு எல்லாப் பள்ளிகளையும் திறந்துவிடச் செய்தார். இரண்டு: 1911-12-ல் முதன் முதலாகத் தெலுங்கில் அமைந்த நூலாக பாரத அர்த்த சாஸ்திரமு என்ற பொருளியல் நூலை எழுதினர். இந்நூல் ‘விஞ்ஞான சந்திரிகா கிரந்த மண்டலி’ என்ற சங்கத்தினரால் சென்னையில் 1914-ல் வெளியிடப்பெற்றது.