பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் ஐந்து அரசியலில் பாய்ச்சல் 1921-ல் இந்திய வானத்தில் காங்கிரசின் ஆதரவில் விடுதலை இயக்கம் என்ற போர்-ஒலி மிக அதிகமாகக் கேட்கத் தொடங்கி யது. மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு திட்டத்தின்கீழ்ச் சட்டமுறைப் படி ஒரு புதிய அமைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்பெற்றது. சென்னையில் மாற்றப்பெற்ற அரைப் பொறுப்பில் நீதிக்கட்சி ஆட்சி செய்து வந்தது. மைசூர்ப் புழுதியைத் தம் கால்களால் உதறித்தள்ளிவிட்டு வந்த ரெட்டி சென்னை அரசியல் பேரிரைச்ச லில் மிக ஆழமாக இறங்கிவிட்டார். இதில் தம் சொந்த மனச் சாய்வு சித்துர் நண்பர்களின் துண்டுதலால் மாத்திரமே வலிமை பெற்றது. நடைமுறையில் இரட்டையாட்சியின் வரையறையைத் தாம் அறியாவிடினும், இவர் புதிய அரசியலமைப்பில் உயர்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஒரு பெரிய பந்தயத்திற்காக ரெட்டி விளையாடிக் கொண்டுள் ளார் என்பது முற்றிலும் நிகழக்கூடியதே. மிகக் குறைந்த அளவில், இவர் அரசியல் ஏற்பாட்டின்கீழ் தாம் இருக்கும் இடத்தைக் கண்டறிய மிக உறுதியாக முயன்றுகொண்டிருந்தார். பிரிட்டிஷ் ஆளுனர்களின் ஆசியால் பிறந்த நீதிக்கட்சியில் இவர் சேர்ந்தார். இவர் எளிதாக ஆலோசனைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றபோதிலும் வகுப்புவாத வெறியும் பதவி வேட்டையும் கொண்ட ஒரு சூழ்நிலை தம்மைப்போல் சி ந் த னை ப் போக் குள்ள ஒருவருக்குச் சிறிதளவேனும் உகந்தது என்று காண முடிய வில்லை. டாக்டர் கே. ஆர். சீனிவாச அய்யங்காரின் சொற்களில் கூறினல் அஃது ஒரு புதிய தொடக்கம் என்பதைவிடத் தவருன தொடக்கம் என்று சொல்லலாம். மேனுட்டு முறையில் பயிற்சி பெற்ற முற்போக்குக் கொள்கையையும் முற்போக்குக் கருத்து களையும் உடைய அறிவாற்றலுள்ள ஒருவருக்கும், முக்கியமான வாய்ப்பில் நோக்குடைய வீட்டிலேயே வளர்க்கப்பெற்ற உள்ளூர் மேலாளித்தனம் பண்ணுபவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பெற்ற ஆளுங் கட்சிக்கும் இடையே மக்களாட்சி செயற்படவேண்டிய முறையில் சிறிதளவுகூட பொதுவான கருத்து இல்லை. இவர்க