பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டாக்டர் சி. ஆர். ரெட்டி ளிடையே பிரிவு ஏற்படுவதற்கு அதிகக் காலம் ஆகவில்லை. பனகல் அமைச்சரவையின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர வேண்டிய அளவுக்கு உணர்ச்சியும் சிந்தனையும் அற்ற அதன் திட்டங்களால் வெறுப்புக்கு ஆளானர் ரெட்டி. அந்தத் தறுவாயில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவு நினைவிலிறுத்த வேண்டிய ஒன்ருக அமைந்தது. மலையாளத்திலும் (மலபார்) ஆந்திராவிலும் நடைபெற்ற அதன் போலிஸ் அடக்குமுறையை யும் பொதுவாக அது கையாண்ட மக்களாட்சிக்குச் சிறிதும் பொருந்தாத முறைகளையும் கடுமையாகச் சாடினர். ஒத்த மனப்பான்மையுடைய சில நண்பர்களின் துணையைக் கொண்டு ஒன்றுபட்ட தேசியக் கட்சி என்ற ஒரு கட்சியை விரை வில் அமைத்தார். அரசினைக் கவிழ்க்கும் அளவுக்கு உறுப்பினர் களைக் கொண்ட வலுவுடைய கட்சியாக இல்லாவிடினும் (தேர்வு இல்லாது அமர்த்தப்பெற்ற குழுவின் ஆதரவு காரணமாக, அத்தகைய தற்செயல் நிகழ்ச்சி ஒருவகையிலும் ஏற்பட முடி யாது), அமைச்சரவை கவலைகொள்கின்ற அளவுக்குப் பல நெருக்கடி நிலைமைகளைத் தவருமல் அதல்ை உருவாக்கமுடியும். அங்ங்ணம் அஃது உருவாக்கத்தான் செய்தது. இராமலிங்கா ரெட்டியின் திறமைக் கூறினலும், பெற்ற பயிற்சியினலும் இவருக்கு மிகவும் பொருத்தமான கல்வி அமைச்சர் பதவி கொடுக்கப்பெறவில்லையே என்று இவருடைய நண்பர்களும், இவர்மீது ஈடுபாடு கொண்டு பாராட்டுபவர்களும் அடிக்கடி வருந்தியதுண்டு. ஆனல் அரசின் குறைகளை எடுத்துக் காட்டுபவ ராகிய இவர் அமைச்சர்களைச் சதா அந்தரத்தில் நிறுத்திக் குற்றங் களைச் சுட்டிக் காட்டித் துன்புறுத்துவதில் முதற்படியிலிருந்தார். இவர்தம் விரைந்துணரும் சொல்திறனும் சுருக்கென்று தைக்கும் ஏளனப்பேச்சும் மன்ற நடவடிக்கைகளுக்கு உயிர்ப்பூட்டுவனவாக இருந்தன. இவையில்லாவிடில் சட்டமன்ற நடவடிக்கைகள் நீண்ட பொருளற்ற பேச்சுகளாகவும், சோர்வுறுத்துவனவாகவும் செய்து விடும். முதல் அமைச்சராக இருந்த பனகல் அரசர் வெட்டியும் ஒட்டியும் பேச இடந் தரும் வாதப் போரில் பயிற்சி பெருதவராத லால் அடிக்கடி ரெட்டியின் வசைமாரிக்கு இலக்கானர். ஆளுங்கட்சி ஐயுறவான முறைகளில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை அடைய சமாளிப்பதைப்பற்றிக் குறிப்பிட்ட ரெட்டி சொன்னர்: அமர்த்தல்கள் இணைப்புகளுக்கு வழி காட்டு கின்றன. ஏமாற்றங்கள் பிரித்தல்கட்கு வழிகாட்டுகின்றன.(ஆங்கில மொழிச் சொற்ருெடரில் அமைந்துள்ள ஒலிக்குறிப்பும் சொல் நயமும் கேட்போருக்குத் தனி இன்பம் நல்கும்).' 1. Appointments lead to attachments; and disappointments lead to detachments.