பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர் சி. ஆர். ரெட்டி களால் சலுகையின் போதுமான அளவு கழிந்துகொண்டேபோகும் முறையினால் இவரது மகிழ்ச்சி தொலைதுாரம் சென்றுவிட்டது. 1925-ல் ஆந்திரப் பல்கலைக் கழகச் சட்டம் நிலவரச் சட்ட நூலாக வைக்கப்பெற்ற பிறகு, இராமலிங்கா ரெட்டி அந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை-வேந்தராக நியமிக்கப்பெற்ருர், சரியான பதவிக்குச் சரியான மனிதர் தெரிந்தெடுக்கப்பெற்ருர் என்று எல்லோரும் வாழ்த்து கூறினர். தொந்தரவு தரும் உறுப் பினர் ஒருவர் சட்டமன்ற மண்டபத்தில் எதிர்ப்பு தரும் குழுவி னின்றும் நீங்கிவிட்டார் என்று முதல் அமைச்சர் மகிழ்ச்சி அடைந் தார் என்ற வதந்தியும் கூடவே பரவத் தொடங்கியது. பத்திரிகை உலகிலும் பொதுமக்களிடையிலும், 'அரசியலுக்கு ஒர் இழப்பு, கல்விக்கு ஒர் ஆதாயம்' என்ற விளக்க உரைப் பல்லவி கேட்கலா யிற்று. 'அரசியலுக்கு ஓர் ஆதாயம், கல்விக்கு ஒர் இழப்பு’’ என்ற பல்லவியையும் அன்பற்ற ஒரு குறும்புக்காரக் கோமாளி குத்தலான சிலேடையுடன் எழுப்பிவிட்டார். இயல் ஆறு துணை-வேந்தர் இராமலிங்கா ரெட்டி துணை-வேந்தரின் பணிகளை மேற் கொண்டபோது ஆந்திரப் பல்கலைக் கழகம் பெயரளவில்தான் இருந்தது. இஃது உள்ளூரைச் சார்ந்த இருப்பிடமாகவும் இல்லை. இவர் பெசவாடாவி (விசயவாடையி)லிருந்து (ரெட்டி பெசவாடா வை பிளேஸ்வாடா என்று வழங்கவே விரும்பினர்) செயற் படத் தொடங்கினர். ஆனல் இவர் ஒன்றுமில்லாத வெற்றிடத்தி லிருந்தே ஒவ்வொன்றையும் செய்ய வேண்டியதாயிற்று. எல்லா விதச் சிக்கல்களடங்கிய பல்கலைக் கழகச் சட்டத் தொகுதிகளை உரு வாக்கல், பல்கலைச் சின்னம் தேர்ந்தெடுத்தல், படிப்புத் துறைகளை அமைப்பதில் குறிக்கோளுரையைத் தேர்ந்தெடுத்தல், ஆசிரியர் 1. BIAEwADA-கதிரவன் வெப்பம் கொழுந்துவிட்டெரியும் இடம்.