பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணை-வேந்தர் 23 களே நியமித்தல் போன்ற எல்லாச் செயல்களையும் இவர் மேற் கொண்டார். பல்கலைக் கழகத்தை அமைக்கவேண்டிய இடத்தைத் தேர்ந் தெடுப்பதுதான் இவருக்கு ஓயாத தலைவலியைத் தந்தது. அனந் தப்பூர், விசயவாடை, இராசமகேந்திரபுரம், விசாகப்பட்டினம், ஆந்திராவில் நீங்கள் கருதும் எல்லாப் பெரிய நகரங்களும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் உரிமைகளை முன் வைத்தன. 'இடங் களைத் தேர்ந்தெடுப்பதுபற்றிய போர் சிலகாலம் சீற்றத்துடன் நடந்துவந்தது"; மற்றவற்றினும் ரெட்டியின் தனிப்பட்ட விருப் பம் வால்ட்டயரின் மேட்டு நிலப் பகுதி.மீது இருந்தது; அரசும் இதனை உறுதிசெய்தது. முடிவாகும் தறுவாயில் இது மிகச் சிறந்த தாகவே அமைந்துவிட்டது. உடல் நலத்துக்குகந்த தட்ப-வெப்ப நிலையும், கடலுக்கு அண்மையுமாகவும் அமைந்த இந்த இடத் தைத் தவிர வேறு இடம் சிறந்ததாக அமைந்திருக்க முடியாது. சில பழைய பல்கலைக் கழகங்களைப் போலன்றி, ஆந்திராவில் கற்பித்தலுக்கும் ஆராய்ச்சிக்கும் அழுத்தம் இருந்தது. கிளே நிலை யங்களாக இணைக்கப்பெற்ற கல்லூரிகளைத் தவிர, பல்கலைக் கழகத் துடன் உறுப்புகள் போலமைந்த கல்லூரிகளும் இருந்தன. ரெட்டி சமூக அறிவியல்களைப்பற்றிய மாளுக்களுக இருந்தாலும், துறை களை அமைக்கும் முறையில் அறிவியல் மனக்கவர்ச்சிப் போக்கினைக் காட்டினர். மரபு முறையான உருவிலுள்ள அறிவியல் துறை களுடன், கணித இயற்பியல் அணுக்கரு இயற்பியல், பின்னர் அமையப்போகும் மற்றவை போன்ற புதிய பாடங்களுக்கும் துறைகள் உருவாக்கப்பெற்றன. இங்கிலாந்திலும் உலகிலும் மிகப் ப ைழ ைம யா ன இரண்டு பல்கலைக் கழகங்களின் ஒன்றன் மாளுக்களுக இருந்தபோதிலும், ஆந்திரப் பல்கலைக் கழகத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மறுபகர்ப்பாகச் (Replica) செய்ய முனையவில்லை. வளரும் சமூகத்திற்குத் தேவையானவற்றிற்குப் பொருத்தமான ஒரு கோலத்தில் பழைய உலகிலும் புதிய உல கிலும், கீழ்நாடுகளிலும் மேல்நாடுகளிலும் உள்ள பல்கலைக் கழகங் களிலுமுள்ள எல்லா நற்கூறுகளும் அடங்கும் முறையில் நடுநிலை யுணர்வுக் கலப்பு நயத்துடன் திகழக்கூடிய ஒன்றைக் கற்பனையில் கண்டார். தெலுங்கு மொழியிலும் இலக்கியத்திலும் தமக்கு இணை யானவர் எவரும் இலர் என்ற நிலையிலிருந்தபோதிலும் ரெட்டி பல்கலைக் கழகத்தில் தெலுங்கு மொழியைப் பாட மொழியாகத்கற்பிக்கும் வாயிலாகத்-தேர்ந்தெடுக்க முனையவில்லை. தரத்தில் உயர்ந்தவையாக இருக்கவேண்டும் என்ற கொள்கையில் இவர் ஒரு பிடிவாதக்காரர். பல்கலைக் கழகத்தை உலகப்பற்றியல்புடன் திகழும் நிலையமாக அமைய வேண்டும் என்று விரும்பினர்.