பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர் சி. ஆர். ரெட்டி ஆயினும், தெலுங்கு, பிற இந்திய மொழிகள் ஆகியவற்றிற்குத் தனித்தனித் துறைகளே அமைக்க ஆதரவு காட்டினர். இதுவரை யிலும்தான்; இதற்கு மேல் இல்லை. 'மெதுவாக விரைவுபடுத்து' என்பது இவர்தம் குறிக்கோளுரை. பல்கலைக் கழகத்தின் சின்னத்தைத் தேர்ந்தெடுப்பதில் ரெட்டி தனிக் கவனம் செலுத்தினர். கதிரவன்கீழ் மலரும் நிலையிலுள்ள பல்லிதழ்களைக் கொண்ட தாமரை மலர் இருபக்கங்களும் இரண்டு பாம்புகளால் பாதுகாப்பாக அமைந்த வட்டமொன்றின் மைய மாக அமைந்தது. ஆந்திர விஸ்வ கலா பரிஷத்' என்ற பெயர் தெலுங்கு எழுத்தில் காணப்பெறுகின்றது; இத்துடன் வேத வாழ்த்துரையினின்றும் எடுக்கப்பெற்ற 'தேஜஸ்வைன அவதூத மஸ்து' (பொருள்: மாளுக்கர்களாகிய நாம் ஒளியுடன் பொலி வோம்) என்ற வடமொழியாலமைந்த குறிக்கோளுரையும் சேர்ந்து திகழ்கின்றது. பாம்புகள் அறிவைச் சுட்டிக் காட்டுவதுடன், ஆந்தி ரர்கள் நாக முன்னேர்களுடன் கொண்டுள்ள புராணத் தொடர்பை விளக்கும் ரெட்டிகளின் தனிப்பற்றுக் கொள்கையையும் குறிப் பாகத் தெரிவிப்பதற்காகவும் அமைக்கப்பெற்றிருக்கலாம். இந்தி யக் கலை உருவப்படங்களிலும் இந்து மறைபொருளாராய்ச்சி நூலில் குறிப்பிடப்பெறும் உருக்காட்சியிலும் திரும்பத்திரும்பக் காணப்பெறும் தாமரை மலர் மக்களின் பொதுவிருப்பான தலைமைக் கருத்தினைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. சித்துாரி லுள்ள தம் சொந்த உறைவிடத்திற்கு 'பத்ம பிரபஸா’ (தாமரை ஒளி) என்று பெயரிட்டதிலிருந்தே இது தமது சொந்த விருப்பம் என்பது தெளிவாகின்றது. கற்பிக்கும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் ரெட்டி தகுதி யின் அடிப்படையில் செயற்படுவதில் மிகக் கண்டிப்பாக இருந் தார். தாய் மொழி எதுவாக இருப்பினும், பிறந்த இடம் எது வாக இருப்பினும், உயர்ந்த படிப்புத் தகுதி இருப்பின் ரெட்டி அவர்களை எடுத்துக்கொள்வதற்குத் தயாராக இருந்தார். இவ ரிடம் மக்கள் எதிர்பார்த்ததற்கு ஏற்ப, இவர் ஆந்திரர்கட்கு ஆதரவு காட்டுவதில்லை என்று சில பகுதியினர் இவரைக் குறை கூறினர். இவர் அதைப் பொருட்படுத்துவதில்லை; மாருக அஃது உயர்நிலையில் தன்னுடைய புறவய உணர்வை மறைமுகமாகக் காட்டும் புகழ் உரையாக எடுத்துக்கொண்டார். ஒரு பல்கலைக் கழகம் என்ற கருத்திற்கு ஒரு பருப்பொருள் வடிவம் தருவதில் வேறு எவரும் இவரைப்போல் கடுமையாக முயன்றிருக்க முடியாது. தம்முடைய விடாமுயற்சியில் வெற்றிகள் --தோல்விகள், ஏமாற்றங்கள்-நிறைவேறுதல்கள் போன்ற எல்லா வற்றையும் ஏற்றுக்கொண்டு பல முட்டுக்கட்டைகளையும் தடங்கல் களையும் இவர் சமாளிக்க வேண்டியிருந்தது. முதல் ஐந்தாண்டு