பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணை-வேந்தர் 25 களின் முடிவில் ஒரு கணிசமான அளவிற்கு முன்னேற்றம் தென்பட்டது. முழுநேரத் துணை-வேந்தர் பதவியில் இருக்கும்போது தாம் கட்சி அரசியலுக்கு விடைகொடுக்க வேண்டியவராக இருந்த போதிலும், காந்தியடிகளின் விடுதலைப் போராட்டம் பற்றிய கருத்துகட்குப் பரிவுகாட்டி, ரெட்டி ஒரு முன்னேற்றமுள்ள தேசியவாதியாகவே நிலைத்திருந்தார். என்றபோதிலும் அரசிய லமைப்பிற்குக் கட்டுப்பட்டவராக இருந்தபடியால், 1930-ல் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கத் தீவிரவாதிகளுடன் துணிவாகச் சேர்ந்து செல்ல இயலவில்லை. ஆனால், ஒத்துழையாமை இயக் கத்தை அடக்குவதற்காக அரசு அச்சம் தரும் அடக்குமுறைச் செயல்களை கட்டவிழ்த்துவிட்டதை இவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், இவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தம்முடைய துணை-வேந்தர் பதவியைத் துறந்தார். பல்கலைக் கழக வேந்தரான சென்னை ஆளுநருக்கு இவர் எழுதிய மனவெழுச்சிகளைத் தூண்டும் முறையிலமைந்த கடிதம், என்றும் நினைவில் வைக்கத் தகுந்த ஆவணமாகத் திகழ்கின்றது. புகழ்பெற்ற இதழாசிரிய ராகிய காசா சுப்பராவ் இதனை, 'நாட்டின் நாட்டுப்பற்று மிகுந்த உயர்தர இலக்கியம்' என்று புகழ்ந்து வாழ்த்துரை வழங்கினர். எழுதியவரின் நிலையைச் சுருக்கமாகக் கூறும் முகத்தான் அது தெரிவித்தது: . . . தம்முடைய அரசியல் தொடர் பு எப்படியிருந்த போதிலும், இந்தியர்கள் யாவரும் ஒன்றுகூடித் திரண்டு இந்தத் தாக்குதலைத் தோற்கடிக்க வேண்டியது தமது தெளி வான கடமையாகும் என்று நான் கருதுகின்றேன். காங்கிர சினின்று மாறுபட்டவர்கள்கூட, அஃது இந்தியாவில் தேசிய அடையாளத்துடன் நிறுவப்பெற்ற மிகப் பெரிய ஆய்வுக் கூடம் என்பதையும், அஃது இந்தியர்கட்கு அமைப்பு முறை யின் கலையையும் ஒழுங்குமுறையையும் கற்றுக்கொடுத்துள் ளது என்பதையும், எழுச்சியூட்டும் அன்பையும் வல்லந்தச் செயலின்மையையும் மனத்திற் பதிய வைத்து அரசியல் கிளர்ச்சியை ஆன்மிக ஆற்றலுள்ளதாகச் செய்துள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். என் நாட்டு ஆண் மக்களும் பெண் மக்களும் புரிந்த தியாகச் செயல்களும் பட்ட துன்பங்களும் என்னுடைய இன்றைய பதவியில் இருக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யுள்ளன. இந்த வெந்துயர் தரும் நிகழ்ச்சிகளிடையே துணை-வேந்தர் பதவியை வகிப்பது மகிழ்ச்சியும் அன்று, மேதகைமையும் அன்று என்பதை நான் காண்கின்றேன்.