பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர் சி. ஆர். ரெட்டி 1930-ம் ஆண்டிற்கும் 1936-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ரெட்டி பல்கலைக் கழகத்திற்கு வெளியில்தான் இருந் தார். ஆயினும் இவர் ஆந்திராவைச் சார்ந்த மற்ருெரு பெரிய கல்வியாளரும், தமது நண்பருமான டாக்டர் ச. இராதாகிருட்டி ணன் தனக்குப் பின்னவராக நியமிக்கப்பெற்றமையறிந்து மன நிறைவுகொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர பங்கு கொள்ளாவிடினும், இவரால் வேலை செய்ய மனமின்றி வாளா இருக்க முடியவில்லை. இக்காலம்தான் இவர் ஆற்றிய அரசியல் இடைநாடகத்தின் காலமாகும். வட்டமேசை மாநாடுபற்றியும் காந்தியடிகளின் இயக்கம்பற்றியும் கட்டுரைகள் பல எழுதினர்: சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இவைதாம் பின்னர் ஒன்று திரட்டப்பெற்று 'வட்ட மேசை மாகாடுபற்றிய கட்டுரைகளும் பிற சொற்பொழிவுகளும்' என்ற தலைப்பில் நூல்வடிவமாக வெளிவந்தன. உள்ளத்தை உருக்குகின்ற புகழ் உரை ஒன்றில் மகாத்மாவைப்பற்றி இவர் கூறியது: மகாத்மா காந்தி இலண்டன் அல்லது தில்லியிலிருந்து கொண்டு அரசியலமைப்பை உருவாக்குவதைவிட உள் ளிருந்து கொண்டே நாட்டை உருவாக்குவதில் அதிகக் கவலை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. பிறர் விருந்துண்ணுங் கால் தாம் விரதத்தை மேற்கொள்ளுகின்ருர். ...நம்முடை நாடு துயரங்கள் மிக்க நாடாக இருப்பதால், அவர் துய ரங்கள் நிறைந்த மனிதராக இருக்கின்ருர். யாவரும் வியப்படையும் வகையில், கண்ணிமை தட்டாமல் தம்முடைய துணை-வேந்தர் பதவியைத் துறந்த இம்மனிதர் மிக விரைவில் உள்ளுர் அரசியலில் பங்குபெற அக்கறை கொண்டார். 1935-ல் சித்துார் மாவட்ட வாரியத்திற்குத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பெற்ருர்; அதுவும் திருவுளச் சீட்டுப் போட்டு எடுக்கும் முறையை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவால் குருட்டு யோகம் இவர்பால் சாய்ந்தது. பின்னர் இவர் சட்டமன்ற மேல வைக்கும் தேர்ந்தனுப்பப்பெற்ருர். ஆனல் பெரும் பகுதி காங் கிரஸ் உறுப்பினர்களால் ஆன அந்த இடத்தில் அவர்களே விட்டு இவரால் அதிகம் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் டாக்டர் ச. இராதாகிருட்டிணன் ஆக்ஸ் போர்டில் "கீழைநாட்டுச் சமயங்கள்-அறநூல்கள்’ என்ற துறை யில் பேராசிரியர் பொறுப்பை ஏற்பதற்காக, ஆந்திரப் பல்கலைக் கழகத் துணை-வேந்தர் பதவியைத் துறந்தமையால் 1936-ல் அந்தப் பதவி காலியாயிற்று. அந்த இடத்தை நிரப்புவதற்கு மீண்டும் ரெட்டியே தேர்ந்தெடுக்கப்பெற்ருர். இவர் 1949-வரை