பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் 27 யில் இடையீடு படாத பதவிக் காலத்தை அநுபவித்தார்; இறுதி யாக வால்ட்டயருக்கு விடைகொள்ளும் மொழியீந்து மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் இணை-வேந்தராகச் சென்ருர். இதற்குச் சில காலத்திற்கு முன்னர், ஆந்திரப் பல்கலைக் கழகம் இலக்கியத்தில் மதிப்பியலான டாக்டர் பட்டம் (டி. லிட்) வழங்கி இவரைப் பெருமைப்படுத்தியது. ஆந்திரப் பல்கலைக் கழகத்துடன் தம்முடைய நீண்ட நெருங் கிய தொடர்பால், சிற்சில சமயங்களில் ஏமாற்றங்கள் இருந்த போதிலும், அதனைப் பெரும்பாலும் தம்முடைய உள்விருப்பத்திற் கேற்ப உருவாக்கியதில் மன நிறைவு கொண்டார். தம்முடைய முழுத் திறமையையும் பயன்படுத்திக் கல்வித் தரங்களை நிலை நிறுத்துவதிலும், பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி உரிமையைக் காப்பதிலும், பண்பாட்டு மதிப்புகளை மேம்படச் செய்வதிலும் பெருமுயற்சியை மேற்கொண்டார் டாக்டர் ரெட்டி. மைசூரில் இவர் தங்கினது குறுகிய காலமேயாகும். இவ ருடைய உடல் நலமும் தன்னிலையில் இல்லை. ஆனால், அலுவலக வழக்கமுறை வேலையின் பளுவினின்றும் விடுவிக்கப்பெற்றதால் சிறிது மகிழ்வுடனிருந்தார். மைசூரில் தங்கிய ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்தில் கல்வியாளராகத் தாம் திரட்டிய பழுத்த அறிவின் பயனையும் பல்வேறுபட்ட அநுபவத்தின் பயனையும் அவ் வூருக்கு நல்கினர். 1951-ம் ஆண்டின் தொடக்கத்தில் டாக்டர் இராமலிங்கா ரெட்டி நோய்வாய்ப் பட்டார். சென்னைக்கு வந்து நோயாளி களைப் பேணிக் காக்கும் மருத்துவமனையொன்றில் இடம் பெற்ருர். இவருக்கு அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்பெற்றது. 1951 பிப்ரவரி 24-ல் மண்ணுலக வாழ்வை நீத்தார் ரெட்டி. இயல் ஏழு கவிஞர் இராமலிங்கா ரெட்டி பெருக்க வளமுள்ள எழுத்தாளர் அல்லர்; ஆனால் இவர் ஒரு முன்மாதிரியான எழுத்தாளர். உரை நடையில் இவர் எழுதின அளவு குறைவானதாக இருப்பதாகக்