பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர் சி. ஆர். ரெட்டி கருதினால் செய்யுள் வடிவில் இவர் எழுதியது இதனைவிட மிகக் குறைவேயாகும். கல்வியாளர், ஆட்சியாளர், அரசியல் வல்லுநர் என்ற சுறுசுறுப்பான பொறுப்பில் இவர்தம் நேரத்தின் பெரும் பகுதி இவர்தம் முழுக் கவனத்தையும் கவர்ந்தமை ஓரளவு காரண மாக இருக்கலாம். கவிஞர் என்ற முறையில் இவரது புகழ் முக்கிய மாக முசலம்ம மரணமு என்ற கவிதையாலும், குறைந்த அளவில் வேறு சில சிறிய கவிதைகளாலும் ஓங்கியுள்ளது. ஆனால், இவை யாவும் ஒன்று சேர்ந்து ஐம்பதிற்கு மேற்படாத பக்கங்களில் அடங்கிவிடும். இவரது நூலின் அளவினைவிட நூலின் தன்மையே படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும். இவரைப் பண்டைய உயர்தர இலக்கியத்தின் பின்னணி யோடும் சமகாலத்திய மேம்பட்ட உணர்ச்சியோடும் உள்ள ஒரு கவிஞர் என்று காண்பதற்கு நமக்கு அதிக நேரம் ஆகாது. இவர் ஒரளவு இக்காலத்திற்குரிய புதுமையான எழுத்தாளரே, ஆளுல் ஒரு வேறுபாட்டுடன் காணக்கூடிய புதுமையான எழுத்தாளர். இவரது கவிதை, வடிவத்தில் மரபு நிலையில் மாருதது; ஆனல் பெரும்பாலும் கருத்துகளில் இக்காலத்திய புதுமைக் கூறுகளைக் கொண்டது. இவரிடம் இளம் வயதிலேயே படைப்புக்குரிய மூலக் கூறு எழுந்தது; ஆனால் அஃது இவரிடம் மிகுதியான அளவு இலக்கி யத்தைப் படைக்க நீண்டகாலம் நீடித்திருந்ததாகக் காணப்பெற வில்லை. இவர் வாழ்க்கையின் அறிவு பெறும் தொடக்கக் காலத்தில் இவர் பயின்ற உயர்தரப் பண்டைய தெலுங்கு இலக்கியங்கள், சிறப்பாக மகா பாரதம் பிங்கலிசூரனரின் பிரபந்த இலக்கியங்க ளாகிய கவிதைகள் இவர்தம் இலக்கியச் சுவையில் முடிவான தாக்கத்தை உண்டாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. மிகத் தொடக்கக் காலத்தில் இவர் எழுதிய இலக்கியத்தினின்றும் தெளி வாகிறதுபோல், இவர் அத்தாக்கத்தினின்றும் எளிதாக விடுபட முடிவதில்லை; இவர் தம் தொடக்கக் காலத்தில் எழுதிய இலக்கியத் திலும் இத்தாக்கம் கணிசமான அளவில் அதிகமாகவே உள்ளது. முசலம்ம மரணமு (1899): சென்னைக் கிறித்தவக் கல்லூரி யில் பத்தொன்பது வயது மாளுக்களுக இருந்த காலத்தில் ரெட்டி இக்கவிதையை இயற்றினர். ஆந்திர பாஷாபிமான ரஞ்ச்சனி சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற கவிதைப் போட்டி யில் கலந்துகொள்ள இவர் இக்கவிதையை இயற்ற ஊக்குவிக்கப் பெற்ருர், இச்சங்கத்தின் புரவலராகிய சமர்த்தி ரங்கய்யச் செட்டி என்பார் இதனை மேற்கொள்ளுமாறு ரெட்டியவர்களை இணங்கச் செய்வதற்குப் பொறுப்பாளராக இருந்தார். ரெட்டியவர்கள் இக்கவிதையை இயற்றியதுடன் இதற்குரிய பரிசையும் பெற்ருர். இவரது வகுப்புத் தோழர்களில் சிலர் இதன்மீது காட்டிய அக் கறையினால் ஓராண்டுக்குப் பின்னர் இஃது அச்சிடப்பெற்றது.