பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் 29 இது நூற்றுக்கு மேற்பட்ட செய்யுட்களைக் கொண்டு திகழும் கதை வடிவிலுள்ள ஒரு நீண்ட கவிதையாகும். பிரிட்டிஷ் சிவில் அலுவலரும் தெலுங்குப் புலவருமான சி. பி. பிரெளன் என்பாரால் எழுதப்பெற்ற அனந்தப்பூர் மாவட்ட வரலாறு என்ற நூலினின்றும் இக்கதை எடுக்கப்பெற்றதாகும். அனந்தப்பூர் நக ருக்கு அண்மையிலுள்ள புக்கராய சமுத்திரம் என வழங்கப் பெறும் ஒரு சிற்றுரே கதையின் நிகழிடம் ஆகும். ஏரியின் கரை உடைப்பினால் உண்டாகும் வெள்ளத்தாலேற்படும் பெரிய அளவு அழிவினல் திகிலடைந்த சிற்றுார் மக்கள் தங்களைக் காக்குமாறு போலேரம்மா என்ற தலைமைத் தெய்வத்தை குறை இரக்கின் றனர். பின்னர் இவ்வூரைச் சார்ந்த முசலம்மா என்ற இளம் பெண்மணியை நரபலியாகத் தந்தால் மட்டிலுமே இந்தத் தேவ தையின் சினத்தை மாற்ற முடியும் என்று அறியப்பெறுகின்றது. முசலம்மா பணிவிணக்கமுடைய, அன்பு நிறைந்த, அப்பழுக்கற்ற பெண்மணியாவாள்.சிற்றுர் மக்களின் பொருட்டு இவள் தன்னையே கொடுக்க ஒப்புக்கொள்ளுகின்ருள்; ஏரியின் மூர்க்கத்தனமும் தணி கின்றது. இன்றும் அந்த ஏரியின் கரை இந்தக் கதைத் தலைவியின் பெயரால் முசலம்ம கட்ட (முசலம்மாக் கரை) என்று வழங்கி வருகின்றது. இந்த நிகழ்ச்சியைத் தம் கவிதையின் பாடுபொருளாக எடுத்துக்கொண்டு, டாக்டர் ரெட்டி இதனைச் சூழ்ந்திருக்கும் அவல உணர்வால் மனம் உருகப்பெறுகின்ருர். ஆனல் பாத்திரப் படைப்பின் பொருட்டும் வேறு கலைத்திறக் கூறுகளை அமைத்தற் பொருட்டும் ரெட்டி மூலக்கதையில் ஒரு சில சிறிய மாற்றங்களைச் செய்துள்ளார். கதையைக் கவிஞர் கையாளும் முறை முற்றிலும் மரபுப் பண்பை ஒட்டியதாகும். இது முழுதும் பண்டைய பிரபந்த நடை யில் அமைந்துள்ளது. கையாண்ட மொழி ஏட்டு வழக்கினது. சில இடங்களில் அது நீண்டு வளைத்த வடமொழி கூட்டுச் சொற்க ளாலும், பிற இடங்களில் அட்சத் தெலுங்கின் வழக்கிறந்த தொடர் களாலும் நிறைந்துள்ளது. இதில் கையாளப்பெற்றுள்ள யாப்பு வடமொழியைச் சார்ந்த உதபலமாலை, சம்பகமாலே போன்ற விருத்தங்களாலும், நாட்டு வழக்கில் மாற்றுருவம் பெற்ற சீசபத்யம், கந்த-பத்யம், ஆட்டவெலதி, தேட்டகீதி முதலியவை களாலும் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்து (இஷ்ட தேவதைப் பிரார்த்தனை), எடுத்துக்காட்டாக இருக்கும் கவிஞருக்கு வணக்கம் (சுகவி சுருதி), அன்புப் படையல் செய்யுள்(கிருதி சமர்ப்பணம்), இறுதியுலுள்ள வாழ்த்துரை (பரத வாக்கியம்) போன்ற நன்கு அறியப்பெற்ற பிரபந்த அமைப்புக்குரிய உறுப்புகளும் இதில் காணப்பெறுகின்றன. 107 செய்யுட்களடங்கிய இந்நூலில்