பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர் சி. ஆர். ரெட்டி முன்னுரையாக அமைந்த பகுதியில் மட்டிலும் பதினறு செய்யுட் களும், மரபு முறைப்படி முடியும் வாழ்த்துப் பகுதியில் மூன்று செய்யுட்களும் அடங்கியுள்ளன. வருணனைப் பகுதியிலும் இது பிரபந்த நடையினின்றும் அதிகமாக மாற்றம் பெறவில்லை. சிற்றுாரின் குளம் மாபெரும் ஏரிபோலவும், மூர்க்கமான அலைகள் நிரம்பிய கடலாகவும் பேசப் பெறுகின்றது. செய்யுளின் அடிகள் உயர்த்த ஓசை நயம் பெற் றுள்ளன: சல துத்துங்க மகோகிர பங்க படலி சங்கட்டனுராவ முஜ்வல கூலாக்ர நடத்தரங்க ரவ மஞ்ச்சன் மத்ய பாகபூமி ப்ருத்குல சம்பாதி மகோர்மிகா நிகர நிர்க்கோஷம்புனும், கூடகா நலருன் கோர சரஸ்ஸ் திக்விதலன வ்யாபார பாரீனமை. தமிழ் எழுத்திலமைந்த இந்தச் செய்யுளே கிட்டத்தட்ட அடியிற்கண்டவாறு தமிழ்ச் செய்யுள் வடிவத்தில் அமைக்கலாம்: வீருர்ந்த பேரேரி மிக்குயர்ந்து பொங்கி வெருவுறத்தம் முடன்மோதிப் பொருதரங்கத் திரளால் மாருது கரைகளிலே ஒயாமல் என்றும் மகிழ்வுடனே நடம்செய்து திகழ்தரங்கத் திரளால் பேராது புனல்நடுவண் மேவுமுயர் பாறைப் பெருமிதத்தைச் சாருதற்கு முயல்தரங்கத் திரளால் பாரார்ந்த எண்திசையை அணுவணுவாய்த் தகர்க்கப் படர்வதற்குத் தயாராக இருப்பதுபோல் தோன்றும். குளத்தின் பரப்பளவு எப்படியிருப்பினும், இத்தகைய பேருருவம் ஆசிரியரின் உள் அவாக்களுள் நடப்பியல் (Realism) ஒன்ருக இருப்பின் படிப்போரிடம் நம்பிக்கையைத் தூண்டுவது பொருத்தமற்றதாகி விடும். தலைமைப் பாத்திரமாகிய முசலம்மா வின் குணநலன்களைக் கோடிட்டுக் காட்டும் முறையில் சில இடங் களில் ஆசிரியர் கையாளும் உவமைகள், உருவகங்கள் ஒரளவு இவள் பிரபந்தத் தலைவியருள் ஒருத்தியை நினைக்கத் செய்கின்ருள். ஆயினும், புலவர்கள், சிறப்பாக இதற்கு ஒரு நீண்ட முக வுரை எழுதியுள்ள காலஞ்சென்ற பேராசிரியர் பிங்கலி இலட்சுமி காந்தம், இந்த இலக்கியம் முக்கியமாக அணுகுமுறையில் இக் காலத்துக்குகந்தவாறு புதுமையாகவே உள்ளது என்று வாதிக் கின்றனர். ஆனல் ஒன்று: கூட்டான நல்வாழ்வுக்காக மேற்