பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் 31 கொண்ட தனியொருவரின் தியாக உணர்வு என்ற ஒரு சமூகத் தலைப்பு சமகாலத்திற்குப் பொருத்தமாக இருப்பதைக் காணலாம், வானநிலையின் மானுமாரிப் போக்கை யொட்டி வரட்சிக்கும் வெள்ளத்திற்கும் உட்பட்ட ஆந்திரத்தின் ஒரு பகுதியாகிய இரா யர் சீமை, ஒரு வரண்ட நிலப் பகுதி என்பதை யாவரும் நன்கு அறிவர். மரபு வழிவந்த பண்டைய உயர்தர தெலுங்கு இலக்கி யங்கள் யாவும் புராணத்தில் காணப்பெறும் பழங்கதைகள், கட்டுக் கதைகள் போன்ற பொருள்களையே பாடுபொருள்களாகக் கொண்டுள்ளன; ஒன்றுகூட சமூகம்பற்றிய பாடுபொருளைக் கொண்டு அமையவில்லை. அடுத்து, இரண்டு: கதையோ கதைத் தலைவியின் இறப் பாகிய துயர நிகழ்ச்சியில் முடிவு பெறுகின்றது, இஃது 'அமங்கல மானது' என்று கவிதை மரபு இத்தகை முடிவிற்கு ஆதரவு தருவ தில்லை. காவியங்களும் பிரபந்தங்களும் திருமணம், வெற்றி முதலியவற்றைக் குறிப்பிடும் முறையில் மகிழ்ச்சி தரும் முடிவாக அமையவேண்டும் என்று எதிர்பார்க்கப்பெறுகின்றன (மங்களா தீனி, மங்கள மத்யாணி, மங்களாந்தானி)', ஆகவே, ரெட்டியவர் களின் சோதனை இங்கு ஒரு துணிகரமான புத்தமைப்பாகக் காணப் பெறுகின்றது; இஃது இக்காலத் தெலுங்குக் கவிதையின் எல்லை யைக் காட்டும் அடையாளமாக ஒப்புக்கொள்ளப்பெறுவதற்குத் தகுதியடைகின்றது. மேலும், மூன்று: புனையுரைகளும் போலிப் புனைவின் கற்பனை உயர்வுகளும் மலிந்துள்ள பிரபந்தத் தலைவியர் போலன்றி, முச லம்மாவின் பாத்திரப் படைப்பு அடக்கத்துடனும் மெய்வாய்மை கெடாதும் உள்ளதாகக் கூறப்பெறுகின்றது. இவள்தம் இதயப் பண்புகள், இல்லக் கிழத்தி என்ற முறையில் இவள்தம் கடமை யுணர்வு, பற்றுறுதி, எல்லோர்மீதும் இவள் காட்டும் தாய்மைப் பண்புகளான அன்பு இரக்கம் ஆகியவற்றிற்கு அழுத்தம் தரப் பெற்றுள்ளது. முடிமுதல் அடிவரை (கேசாதிபாதம்) காம உணர் களே எழுப்பவல்ல வருணனைகளில் விஞ்சும் முறையில் பிரபந்தக் கவிஞர்கள் உடல் வனப்பை எடுத்துக்காட்டும் முறை இங்குக் கண்டிப்பாகத் தவிர்க்கப்பெற்றுள்ளது. இந்த இலக்கியத்தின் முழுதும் தழுவிய சாந்தச் சுவையை யொட்டியே இங்ங்னம் அமைக்கப்பெற்றுள்ளது. பிரபந்தக் கவிஞர்களின் தனிப்பற்றுக் குரிய சிருங்காரச் சுவை (காதல் சுவை) இங்கு எந்தப் பகுதி யிலும் இடம் பெறவில்லை. என்ற போதிலும், சமகாலத்தியத் திறய்ைவாளர்கள், கதைப் பொருளைத் தேர்ந்தெடுப்பதாலோ அன்றி கதையை முடிக்கும் 1. நற்ருெடக்கம், நல்மையம், நன்முடிவு.