பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர் சி. ஆர். ரெட்டி இயல்பாலோ மட்டிலும் ஒரு கவிதை இலக்கியத்தில் இக்காலத்திய புதுமைக் கூறு அமையுமாறு செய்ய முடியாது என்ற சரியான கொள்கையைக் கொண்டுள்ளனர். கவிஞர் ஒருவருக்குப் புராணம், வரலாறு, அரசியல், சமூகம் ஆகிய எந்த மூலங்களிலிருந்தும் பாடு பொருளைக் கடன் வாங்கும் உரிமை இருந்தாலும், அதனைக் கையா ளத் தேர்ந்தெடுக்கும் முறையில்தான் அதன் சிறப்பு அமை கின்றது. ரெட்டி இதனை முற்றிலும் இக்கால முறையில் கையாள வில்லை. சிறப்பாக, இது மரபு முறையினின்றும் வேறுபட்டதாகும்; அதுவும் தெளிவாகத் தெரியும் வேறுபாடும் அன்று. துன்பகர மாக முடிவுபெறுகின்றது என்ருல், அது முற்றிலும் புதிதாக அமைந்த தன்று: ஆசிரியர் அதிகமாக நம்பிக்கைக் கொடை மூலத்தினின்றும் எடுத்துக்கொண்டமையால் அது முற்றிலும் ஒரு புத்தமைப்பு என்று சொல்வதற்கில்லை; அது கதையின் ஒரு பகுதியாகவே உள்ளது. ஆகவே, கவிதையின் இந்தக் கூறில் அதிக மான உட்கருத்தினைப் பொருத்திப் பார்க்க முடியாது. இருபதிற்குக்கீழ் வயதினையுடைய கவிஞராகிய ரெட்டி உயர்தர யாப்புத் திறனையும் இனிமை தரும் மொழித் திறனையும் புலப்படுத்துகின்ருர். இவர் மெச்சிப் பாராட்டிய கலைமுறையைக் கொண்ட தலைவர்களுள் திக்கனரும் பிங்கலி சூரனரும் குறிப்பிடத் தக்கவர்கள். நற்பயன் விளையும் என இவர் கருதும் இடங்களி லெல்லாம் அவர்களைப் பின்பற்றினர். இவர் கவிதைகளில் இங்கு மங்கும் நன்னயர் போத்தனர் இவர்களின் சாயல்களையும் காண லாம். இதனைத் தவிர, இவர் செய்யுள் நடையில் நல்ல கதை சொல் பவர் என்பதைப் படிப்போரிடம் நன்கு உணரவைக்கின்ருர். பிறரை இணங்கச் செய்யும் முறையில் வாதிடும் நுண்திறமும் இவரிடம் மிகுந்து காணப்பெறுகின்றது. முசலம்மாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் மிகத் திறமையுடன் கையாளப்பெற் றுள்ளது. கடமையுணர்வுடன் மன உறுதியும் கொண்ட மனைவி யும் அன்புடன் நேசிக்கும் கணவனும், துயரம் நிரம்பிய அவ ளுடைய முடிவான தீர்மானத்தைக் குறித்து, வாதத்திற்கு வாதம் ஈடுகாட்டியும், உணர்ச்சி நிரம்பிய கருத்துக்கு உணர்ச்சி நிரம்பின கருத்தினையே இணையாகக் காட்டியும் தோழமைப் பாங்குடன் சொற்றிறம் வாய்ந்த வாதப் போரில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர். இங்கு மனைவிதான் தீர்மானமான முடிவுக் குரியவளாகின்ருள்; இது பெண்ணின் உரிமை மட்டிலுந்தான் என்று கருதுவதற்கில்லே. ஏதாவது ஒர் உதவியைத் தன்னிடம் கேட்டுப் பெறுமாறு கடந்த காலத்தில் கணவர் திரும்பத்திரும்ப வற்புறுத்தியதை அவருக்கு நினைவூட்டி அதனை இறுகப் பற்றிப் பயனை அறுதி செய்துகொள்கின்ருள். அந்தக் காலம் இவளுக்கு