பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் 33 இப்பொழுது நெருங்கியுள்ளது. தான் புறப்பட்டுச் செல்வதற்கு அவரிடம் பிரிவு விடை வேண்டுகின்ருள். எதிர்மறையான இசைவினை விடையாகப் பெறுதல் என்பது இவளால் இயலாது. கணவருடைய மெளனம் பாதி-ஏன் முழுமையான-உடன்பாடா கக் கொள்ளப்பெறுகின்றது. இவளும் அந்தத் தெய்விகப்-தியாகப்பயணத்தை மேற்கொள்ளுகின்ருள். எல்லோரும் நன்கறிந்த பண்டைய உருக்காட்சியைக் கையாண்டிருந்தபோதிலும் முசலம்மா வெளியேறுவதற்காகப் படைக்கப்பெற்ற காட்சி இங்குப் பொருத்தமாகவும் உள்ளத்தை உருக்கும் முறையிலும் அமைந்துள்ளது: ... ஊரு ஹாரித்ரபு ஜீர சாந்த்ய ருசிகா நொப்பார... சரசீம ஹாபிகை சனியே விஸ்பார் பவன் மூர்த்தியை. அவள், மகிழ்வுறப் புனைந்த மஞ்சள் சேலை கதிர்மறை அந்திக் கங்குலின் இடையே மங்கிப் பொலிந்தது; மகிழ்வு நிரம்பிப் பொங்கும் அவள்முகம் செஞ்சுட ரவன்போல் ஒளியுடன் திகழ்ந்தது. நலிவுறு கூட்டம் பறவைக் குலமெனத் துயருடன் அழுதது; அனைவரின் மதிப்பில் உயர்வுறும் அவளோ ஏரியை நோக்கிச் சீருறச் சென்றனள். அவள் குளத்தை நோக்கிச் சென்ற காட்சியைப் பற்றிக் கவிஞர் கூறுகின்ருர்: சேய்மையில் பாயும் செழுநதி கண்டு நடன மிட்டு நடக்கும் குதிரைச் சேவகன் ஈர்ப்பச் செல்பெண் குதிரைபோல் நளினமும் அழகும் நனிநிறை நடையுடன் சாந்தமும் அழகும் ததும்ப நங்கை மெல்ல நடந்துசென் றனளே. தெலுங்குக் கவிதையில் இது சாதாரணமாகக் காணப் பெறும் உவமை அன்று; படிப்பவர்களுள் சிலருக்கு மகிழ்ச்சி தரக் கூடிய உவமையும் அன்று. ஆயினும், ஆசிரியர் ஹோமரின் இலியாத்