பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர் சி. ஆர். ரெட்டி திற்குத் தாம் கடமைப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டு நன்றி தெரிவித்துள்ளார். நீரினுள் கதைத் தலைவியின் உண்மையான மறைவினை விரித் துரைக்கும் ஆசிரியர் தம்முடைய பண்டைய இலக்கியப் புலமை, கவிதைக் கற்பனை இவற்றின் மூலவளத்தினின்றும் அதிகமாகவே எடுத்துக்கொள்ளுகின்ருர். கந்நெர்ர வாரிந கரக்க ரோதயகால மல்லன மருங்கு ஜாபில்லி யனக; ஜ்வலதக்னி சிகலபை நெலநவ்வுதோ போவு தாத்ரீ மகாதேவி தநய யனக; செண்டாமரலபாரு சுந்தரமகுலீல நல்ல நல்லன ஜொச்சு நஞ்ச்ச யனக: கால மகாஸ்வர்ணகார குண்டக்நிலோ கரகிஞ்ச்சு பங்காரு கணிக யனக:

  • * * * * * * * * * * * * * *

இதன் கருத்து தமிழ்க் கவிதையில் வருமாறு: காலையிளங் கதிரொளியால் விழுங்கப் பெற்றுக் கலைகுறைந்து பொலிவிழந்த திங்க ளேப்போல் சீலமுறு முறுவலுடன் கனலின் நாக்குத் திரளின்கண் புகுகின்ற சீதை யைப்போல் கோலமுற மலர்ந்திட்ட பங்க யத்துக் கூட்டத்தே நுழைகின்ற அன்னத் தைப்போல் காலமெனும் பொற்கொல்லன் தீயில் இட்ட கனகம்போல் தண்புனலில் இறங்கி ளுளால்.

  • * * * * * * * * * * * * * * * * *

சில பழைமை விரும்பிகள் கடந்த காலத்தில் குறிப்பிட்டது போல் இந்தக் கவிதை ஒரு சோதனையேயாகும் என்று புகழப் பெற்ருலும், இது பண்டைய இலக்கிய மரபின் வளையாத வரை யறைச் சட்டத்திற்குள் கட்டுப்பட்ட தெளிவான வரம்புடன் கூடிய சோதனையே யாகும். தேவர்கள்-தேவதைகள், அரசர்கள்அரசியர்கள் இவர்கள் நிறைவேற்றின அருஞ் செயல்களேயன்றி சாதாரண மக்களைச் சார்ந்த ஆண்-பெண்களினுடையனவற்றை யும் கவிதையால் போற்றிப் புகழ முடியும் என்பதை எடுத்துக் காட்டிய முதல் ஆசிரியர் இவர்தாம் என்பதில்லை. ஆயினும், ஒரு குறிப்பு மட்டிலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொல்லப்பெற வேண்டியதாகின்றது. இருபதிற்கும் குறைவான வயதினையுடை யவர் இதனை இயற்றினர். அதுவும் தன்னம்பிக்கையுடனும்