பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் 35 பழுத்த கவிஞரின் மேலாண்மை உரிமையுடனும் இயற்றினர் என்பது உண்மையிலேயே மதித்துப் போற்றத் தக்கது. இங்கு மிகுதியான அளவில் நம்பிக்கை தரும் முன்னேற்றமும் இருந்தது. இந்தக் கவிதை, பண்டைய இலக்கியத்திற்கும் இக்கால இலக்கி யத்திற்கும் இடையேயுள்ள நில மாறுபாட்டுக் காலத்தைக் நன் முறையில் குறிக்கக்கூடிய தொன்ருக உள்ளது என்று சொல்ல லாம். இஃது இக்காலத்தைச் சிறிதளவு சுட்டிக் காட்டும் குறிப் புடன் பண்டைய இலக்கியத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட மாற்ற விளைவு என்பது தெளிவு. இக்காலத் தெலுங்குக் கவிதையின் முதல் தோற்றத்தை முன்னறிவித்த புரட்சியைப்பற்றி ஆராய் பவர் வேருேர் இடத்தை நாடிச் செல்லவேண்டும். சிறு கவிதைகள்: பல்வேறு சமயங்களில் இராமலிங்கா ரெட்டி இயற்றிய சிறு கவிதைகளில் அச்சில் நான்கு கவிதைகள் அழியாது வாழ்கின்றன. அவை: (1) தம்முடைய அர்த்த சாஸ் திரமு (1911) என்ற நூலுக்கு எழுதிய படையல் கவிதைகள்: (2) தம்முடைய கவித்துவ தத்துவ விசாரமு (1913) என்ற நூலுக்கு எழுதிய முகவுரைக் கவிதைகள்; (3) தாம் பிள்ளையாகக் கூட்டி வளர்த்த பெண்ணை அவள் திருமணத்தன்று வாழ்த்து கூறும் வகையில் எழுதப்பெற்ற அம்பகாலு (1919) என்ற தலைப்பிலுள்ள கவிதைகள், (4) தெலுங்கு மகா பாரதத்தைப் புகழும் முறையில் அதற்குத் திறனாய்வு முறையில் உரை எழுத_வாக்குறுதி எடுக்கும் போது எழுதப்பெற்ற பாரத பிரகாசமு என்ற தலைப்பிலுள்ள கவிதைகள் என்பவை யாகும். இவை யாவும் ஒன்று சேர்ந்து அச்சில் பத்துப் பக்கங்களுக்கும் குறைவாகவே வரும். ரெட்டியவர்கள் மைசூரிலிருந்தபோது தெலுங்கில் எழுதப் பெற்ற இந்தியப் பொருளாதார நூலுக்கு மைசூரில் இயற்றப் பெற்ற பத்துக் கவிதைகள் இந்த முதற்ருெகுதியில் அடங்கும். இந்தப் பத்துக் கவிதைகளும் கந்தம், கீதம், சீலம், சார்துாலம், சம்பகமாலை என்ற மரபு வழி வந்த யாப்புகளில் அமைந்துள்ளன. இலக்கிய நடையில் அமைந்திருந்தபோதிலும், மொழி பொது வாக எளிதாக இருப்பதால் கவிதையும் நீரோட்டம் போன்ற எளிய நடையில் போகின்றது. கவிதைகள் ஆசிரியரின் சொந்த உட்கருத்தையும் கொண்டுள்ளன; இவை பெயரே இல்லாத காதலி ஒருத்திக்கு அன்புப் படையலாக்கப் பெற்றுள்ளன. கவி தைகள் பண்டைய இலக்கிய வடிவில் அமைந்து, பொருளில் புதுமை உணர்வூட்டக் கூடியனவாகவும் இருப்பதால், இவை இவ ருடைய ஆற்றல்மிக்க உணர்ச்சிகளின் வழிந்தோடும் வெள்ளத்தை எட்டிப்பிடிக்க முயல்கின்றன. இறுதிச் செய்யுளில் தம் காதலி ஐக்கியமாகிய ஐந்து முதற்பொருள்களினின்றும் கூப்பிடுவதை ஆசிரியர் கேட்கின்ருர், உணர்ச்சியால் பாதிக்கும் கருத்துடைய