பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர் சி. ஆர். ரெட்டி இந்த அன்புப் படையல் இவர் நிரந்தரமாகத் திரையிட்டுக் கொண்ட சொந்த வாழ்க்கையின் ஒருபகுதியைக் கணநேரக் காட் சியாகத் தருகின்றது. காரணம், இவர் திருமணம் செய்துகொள் ளவே இல்லை. வேருெரு முறையில் இரண்டாம் தொகுதியிலடங்கிய கவி தைகளும் உணர்ச்சியால் பாதிக்கப்பெறும் கருத்துடையனவாக உள்ளன. 1913-ல் மைசூரில் எழுதப்பெற்ற கவித்துவ தத்துவ விசாரமு என்ற நூலின் நூன்முகம் ஆறு செய்யுட்களாலானது. இவை மரபு வழக்குப்படி பிள்ளை பெற்ருேர்க்கு நல்கும் புகழுரை வடிவில் அமைந்துள்ளன. இதில் தம்முடைய தந்தை சுப்பிரமணிய ரெட்டியின் நேர்மைக்கும் புலமைக்கும் தெவிட்டும் (உவட்டும்?) அளவிற்குப் புகழுரை வழங்கப்பெற்றுள்ளது; இந்த நூலில் அவரைப்பற்றிய நினைவினை நீடித்திருக்கச் செய்ய முயல்கின்ருர். அம்பகாலு (மணமகள் வழியனுப்பு விழா) என்ற தலைப்பில் மூன்ரும் பகுதியில் எட்டுக் கவிதைகள் அடங்கியுள்ளன; இவை 1919-ல் பெங்களுரில் இயற்றப்பெற்றன. இங்கும்கூட, இரக்க உணர்ச்சியைத் துரண்டும் கருத்து மேலோங்கி நிற்கின்றது. எலியா (சார்ல்ஸ் லேம்ப்) தம் மாணி நிலையை விடுவிப்பதற்குக் கனவுக் குழந்தைகளைக் கொண்டிருந்ததைப்போலவே, ரெட்டி யவர்கள் பெற்ருேர் பாசத்தையுடைய தம் இதயத்தின் மாடக் குழியை நிரப்புவதற்குக் காலஞ்சென்ற தம் சகோதரரின் குழந் தைகளைப் பெற்றிருந்தார். உண்மையான தந்தைகூட அன்பு காட்டிய சஞ்சந்தி குமாரி என்ற தன்னுடைய உடன்பிறந்தான் மகளுக்குத் தம் இதயத்தின் இரக்க உணர்வு மிக்க ஒரு மூலை ஒதுக்கி வைக்கப்பெற்றுள்ளது. அண்மையில் நிகழவிருக்கும் அவளது பிரி வினைப்பற்றி இவர் படும் படுநோவினைக் கேட்கலாம்; இந்தச் செய்யுட்கள் ஒவ்வொன்றிலும் கண்ணிர் ஆருகப் பெருகியோடு வதையும் காணலாம். இவளுடன் தாம் அடைந்த மகிழ்ச்சியை யும் அடையாளம் காட்டுகின்ருர். உணர்ச்சிகள் உண்மையாகவே உரத்து ஒலிக்கின்றன. கிட்டத்தட்ட அன்ருட வாழ்க்கை மொழிக்கு ஒத்துள்ளவாறு சொற்கள் மிகச் சிறந்த அளவுக்கு எளிமையாகவே அமைந்துள்ளன. நான்காம் தொகுதியிலுள்ள மகா பாரதத்தைப்பற்றிய புக ழுரையாக அமைந்த ஆறு செய்யுட்கள் மூன்ரும் தொகுதியிலுள்ள வற்றை அடுத்து இயற்றப்பெற்றன. தாம் அன்பு காட்டிய மகள் ஒருத்தியின் பிரிவு நேரிட்ட பிறகு, கவிஞர் அதனலேற்பட்ட இடைவெளியைத் தாம் அன்பு காட்டும் நூல் ஒன்ருல் நிரப்ப முயல்கின்ருர், பண்டைய இலக்கியங்களுள் தெலுங்கு மகா பாரதம் இவருடைய சிறப்பான தனிப்பற்றுக் குரியது. பொரு ளமைப்பிலும் நடைத்திறனிலும், கருத்தாழத்திலும் பாத்திரப்