பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் 37 படைப்பின் நுட்பத்திறனிலும் இவ்வுலகில் இந்த மகாகாவியத் யத்திற்கு இணையான நூல் ஒன்றும் இல்லை என்ற கருத்துடையவர் இவர். தெலுங்கில் இதற்குப் புதியதோர் உரை காண வேண்டும் என்ற தம் நம்பிக்கையை ஒரு சமயம் வெளியிட்டார். ஆனல், இந்த நம்பிக்கை, நம்பிக்கை அளவிலேயே நின்றுவிட்டது. கவயாமினி (1936): முசலம்ம மரணமு என்ற தம் கவி தையை யடுத்து இஃது இவர்தம் மிக நீண்ட, மிகவும் பேரார்வங் கொண்டு இயற்றப்பெற்ற, கவிதை யாகும். உரைநடையில் அமைந்த மூன்று பக்க முன்னுரையைத் தவிர, இது முப்பதிற்கு மேற்பட்ட செய்யுட்களைக் கொண்டது. இஃது இவர்தம் வாழ்க்கை யின் பழுத்த நிலையில் இயற்றப்பெற்றது. அப்பொழுது இவர் நிறைந்த அறிவு அநுபவப் பின்னணியுடன் அறுபதிற்குக் கீழுள்ள வயதுடையவராயிருந்தார். சிறந்த கவிஞர், உயர்ந்த திறனாய் வாளர் என்ற உயர் புகழும் இவர்தம் பின்னணியாக அமைந் திருந்தது. இந்தக் கவிதைக்குப் 'புதிய பார்வையில் பில்கணன்' என்ற மாற்றுத் தலைப்பு பொருத்தமற்றது என்று சொல்ல முடியாது. முன்னுரையில் ரெட்டியவர்கள் சற்று விரிவாக விளக்கியது போல பில்கணியம் என்ற வடமொழிக் காவியத்திலுள்ள மூலக் கதை ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் மறுப்புக்குரியதாகின்றது என்பதைக் காண்கின்ருர். இந்தக் கதை இளமை வளமும் அழகுப் பொலிவும் மிக்க ஆசிரியர் பில்கணனுக்கும், அழகு கொழிக்கும் காஷ்மீர இளவரசியாகிய யாமினி பூர்ணதிலகம் என்ற அவர்தம் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட காதல் நிகழ்ச்சிபற்றியது என் பதை பெரும்பான்மையான இந்தியப் படிப்பாளர்கள் நன்கு அறிவர். இவர் கருத்துப்படி கதையின் தாக்கம் ஒழுக்க நெறிக்கு ஒவ்வாதிருப்பதைத் தவிர, படிப்போரிடம் இதை நம்புவதில் மட்டு மீறிய மனச்சோர்வைச் சுமத்துகின்றது. அரசியலில் குற்றச்சாட்டுத் தரப்பு வழக்குரைஞர்போல் வாதம்புரியும் ரெட்டியவர்கள் மிக்க இளமைப்பொலிவுள்ள ஆசிரி யர் ஒருவரிடம் பருவம் நிரம்பிய தன் மகளைத் தனிமையாக விட்டுவைக்க நினைத்த பொறுப்புள்ள அரசனின் முதிர் அறிவே ஐயத்திற்குரியது என்கின்ருர். அரண்மனை மாதர்ப் பகுதியைச் சார்ந்த இளமங்கையர் விழிப்பும் அநுபவமுமுள்ள மூதாட்டியரின் காவலின்றி விடப்பெறுவது அரிதாகும். இங்கு மட்டிலும் அதற்கு விதிவிலக்கு ஏன்? இது தவிர, சிறு வயதுள்ள இளைஞன் ஒருவன் குருவாக இருப்பதற்கேற்ற ஆழ்ந்த புலமையுள்ளவகை இருக்க முடியுமா? அல்லது, அவனது தனித்திறமை காரணமாக அவன் இயற்கைப் புலவன் என்று நாம் ஊகித்துக்கொள்ள வேண்டுமா? உண்மையில் இவன் ஒர் உண்மையான புலவகை இருந்தால், 3