பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர் சி. ஆர். ரெட்டி புலனுணர்வால் தூண்டப்பெறும் ஆசைக்கு இவ்வளவு எளிதாக இரையாக முடியுமா? அதுவும் ஒர் இளவரசி உயர்பிறப்பின ளாகிய பெண் ஒருத்திக்கு உரிய குடும்ப மரபின் இயல்பான கட்டுப்பாட்டாலும் நாணத்தாலும் அவள் பின்வாங்கி இருக்க முடியாதா? தீய கலை உணர்வும் தீயொழுக்கமும் உள்ள ஒரு நூல் தகுதி யற்றது என்று அதனை அகற்றிவிட்டு, தெலுங்குக் கவிஞர் தம் முடைய வழியில் கதையை வேருெரு முறையில் சொல்லத் தொடங்குகின்ருர். ஆயினும், ஆசிரியர்-மாளுக்கியர் காதல் உறவு உண்மையாயிருக்க முடியுமா என்று இவர் ஐயப்பட்டாலும், இத்தகைய உறவு நிகழக்கூடியதுதான் என்பதற்கு இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முழுத் தெளிவான விளக்கத்தில் ஷாவை நினைவுபடுத்தும் முறையில் ரெட்டியவர்கள் தம்முடைய புனைவாற்றலிலிருந்தே பில்கணன் யாமினி இவர்களின் முக்கிய பண்பு நலன்களை விரித் துரைக்கின்ருர். பில்கணன் நிறை இளமையைக் கடந்த நிலையி னன், ஆனால் இன்னும் முதுமைப் பருவத்தை எட்டாதவன்; நல்லது, கெட்டது என்பவைபற்றி உயர் கருத்தைக் கொண்டவன்; நேர்மையான நெறியினின்றும் வழிதவறுங்கால் தன்னைத் தானே திருத்திக்கொள்ளக்கூடியவன்; யாமினி இளம் வயதினள்; பெருந் தன்மையுள்ளவள்; மகிழ்ச்சி தோரணையை யுடையவள்; குடிப் பண்பு, அழகு இவற்றுடன் உறுதியும் திட்பமும் நிறைந்த மனத்தினள். இளகின இதயத்தையும், இனிய பேச்சையும் இரும்பு போன்ற மன உறுதியையும் உடையவள். இந்தக் கவிதையில் பில்கணன் யாமினியிடம் தன் காதலை உரைப்பதற்கு முன்னர் மிக அதிகமாகத் தயங்குகின்ருன். தான் செய்துகொண்டிருப்பதை நன்கு அறிகின்ருன்; ஆனால், தன்னுடைய முயற்சியினின்று தவிர்ப்பதற்காகவே அவளிடம் அதிகமாக அன்பு கொள்ளுகின்ருன். யாமினி அவனுக்கு மறுமொழி தருவதற்கு முன்னர் அவளிடம் ஒரு மனப்போராட்டமே நிகழ் கின்றது. கவிஞர் அவளுடைய நீர் நிரம்பிய ஒளிமிக்க கண்களைக் கதிரவனும் மழையும் கலந்த கலப்பாக வருணிக்கின்ருர். அவள் அவனைக் கண்டிக்கவில்லை; அவனுடைய நற்குணத்தை நினைவூட்டு கின்ருள். அவள் அவனை விலக்கவில்லை; சீர்திருத்துகின்ருள்; தன் னிலையை அடைவதற்கு அவனுக்குத் துணைபுரிகின்ருள். அவள்தம் சொற்களின் பொழிப்பு வருமாறு: 'பெரியவரே, உம்முடைய அன்பு நிலையற்ற ஒரு போலிப் புனைவு என்பதைத் தவிர வேறில்லை. அஃது உண்மையல்ல என்பதை நான் அறிவேன். துய்மையானவரே, நான் உம்முடைய பிரதிபிம்பம் மாத்திரமே; சினங்கொள்ளாதீர்கள்: உம்முடைய