பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் 39 நிழலில் கவனித்துப் பேணப்பெறும் கொடி நேரிய வழியில் வள ரட்டும். இது பில்கணனிடம் அவள் விரும்பிய பயனை விளைவித்தது; அது கண நேரப் பயனே. அவன் தான் வழுக்கி விழுந்த தவற்றினை உணர்கின்ருன். தன்னைத் திருத்திக்கொள்ளுகின்ருன்; அவள் தனக்கு ஒரு நண்பன் போலவும், மெய்யறிவாளர் போலவும் வழிகாட்டி போலவும் உதவினமைக்கு அவளுக்கு நன்றியுள்ளவ கிைன்ருன். இத்தகைய முடிவு அறநெறிப்படி மனநிறைவு தருகின்றது என்பதற்கு ஐயமில்லை. மேலும், கவிஞர் மனித இயல்பின் கரடு முரடான ஒரங்களை வழு வழுப்பாக்குகின்ருர். இருபாலாரிடையே யும் உள் மனத்திலும் ஆழ்மனத்திலும் எழுகின்ற உறவுகளின் கோணல்களை ஒழுங்காகத் துடைத்துவிடுகின்ருர். இரு சாரா ரிடத்தும் வெந்துயர், ஏமாற்றம் இவற்ருலேற்படும் மன அதிர்ச்சி யின்றிக் கதை மாந்தர்களைச் சீர்திருத்த இயலுமா என்ற வின எஞ்சியுள்ளது. நேர்மைப் பண்பில் கதை வெற்றியடைந்தாலும், மனப்போராட்ட உறைப்பின் நாடகப் பாங்கினை அஃது இழந்து விட்டதாகக் காணப்பெறுகின்றது. பில்கணனிடம் இயல்பாக இருக்க வேண்டிய காம உணர்வாகிய குருதி வற்றிவிட்ட பிறகு மூலக்கதை செம்மை செய்யப் பெற்றுள்ளது என்பது ஐயத்திற்குரிய மேம்பாடேயாகும். இங்குக் கையாளப்பெற்றுள்ள மொழிநடை எளிதாகவே உள்ளது; செய்யுளும் மென்மையாகவும் எளிதாகவும் அமைந்துள்ளது. ஆனால், அவரது முன்னைய இலக்கியத்தில் மாதிரி யாக அமைந்துள்ள தசையும் குருதியும் பெரும்பான்மையாக இழந்த நிலையில், கவிதை சோர்வுடன் காணப்பெறுகின்றது. கவிஞர் என்ற முறையில் இராமலிங்கா ரெட்டி 1899லிருந்து 1936-வரை அதிகமான இலக்கியப் பயணத்தை மேற்கொள்ள வில்லை என்பதை நன்கு அறிய முடிகின்றது. அவரது நடை ஓரளவு பக்குவ மடைந்துள்ளது. ஆனால், பண்டைய இலக்கிய வடிவமும் அறநிலைப் பொருளும் நிலைத்துள்ளன. தம் இளமைப் பருவத்தில் கற்பனையின் கொடுமுடிகளை அளந்திராமல் விட்டுவிட்டதைப் போலவே தம்முடைய முதிர்ந்த பருவத்திலும் நுண்புலத்தின் ஆழங்களைக் கண்டறியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரைச் சுற்றிலும் இக்காலத்தோற்றம் என்னும் தொங்கிய நிலையில் தொழிலாளியாகவே நின்றுவிட்டார்.