பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் எட்டு திறய்ைவாளர் எடுத்ததற்கெல்லாம் குறைகூறும் ஒருவரின் விளக்க வுரைப்படி, திறய்ைவாளர் என்பவர் படைப்பு எழுத்தாளர் ஆவதற்குத் தவறிவிட்டவர் ஆவர். ஆனால், இந்த விளக்கவுரை இராமலிங்கா ரெட்டியவர்கட்குப் பொருந்தாது. படைக்கும் எழுத்தாளரின் மனத்திறனும் திறனாய்வாளரின் மனத்திறனும் வழக்கமாக விலகிக் காணப்பெறுபவை; இவை இரண்டும் இவ ரிடம் ஒருங்கே காணப்பெறுகின்றன. பெரும்பாலான பொருள் களைப்பற்றிக் கலந்தாயுங்கால் ரெட்டியவர்களிடம் சிறப்பாகக் காணப்பெறும் பகுத்தறிவுக்கொத்த அணுகு முறையும் பகுத்தா யும் முறையும் திறனுய்வாளராக அவர் பங்குபெறுங்கால் நன்கு பொருத்தமாக அமைந்தன. முசலம்ம மரணமு என்ற இவரது கவிதை பண்டைய தெலுங்கு இலக்கியத்திலிருந்து இக்காலத் தெலுங்கு இலக்கியம் வரை ஒரு நிலைமாறுபாட்டினைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடியது என்பதாகக் கூறப்பெற்ருல், இவரது கவித்துவத் தத்துவ விசாரமு (சொற்பொருளில் 'கவிதையின் இயல்புபற்றிய ஆராய்ச்சி' என்பது) என்ற நூலை இக்காலத் தெலுங்குத் திறனுய்வில் பெரிய தோர் எல்லையைக் காட்டும் ஓர் அடையாளமாகக் கொள்ளலாம். இஃது ஆங்கிலத் திறய்ைவில் தரமான நூல்களாகிய சிட்னியின் கவிதைபற்றிய காப்புரை ஷெல்லியின் கவிதைபற்றிய தற்காப்பு, வொர்ட்ஸ் வொர்த்தின் உணர்ச்சி தெரிவிக்கும் நாட்டுப் பாடல் களின் முகவுரை, கோலரிட்ஜின் இலக்கிய வரலாறு ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியதாகும். உண்மையில், அலெக்சாண்ட ரின் திறய்ைவுபற்றிய கட்டுரை, மாத்யூ ஆர்னல்டின் திறய்ைவுக் கட்டுரைகள் என்ற நூல்களின் தாக்க அடிச்சுவடுகளைச் சில புல வர்கள் இந்நூலில் காண்கின்றனர். நூல் வடிவில் முதன் முதலாக 1914-இல் வெளியிடப்பெற் றிருப்பினும், இதன் பிறப்பிடங்கள் பத்துப் பதினைந்து ஆண்டுா கட்கு முன்னதாகச் செல்லுகின்றன. 1899-இல் இராமலிங்க ரெட்டி சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் ஆந்திர பாஷாபி