பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வாளர் 41 ரஞ்சனி சங்கத்தின் ஆதரவில் படித்த நீண்ட ஆய்வுக் கட்டுரை யொன்றில் பிங்கலி சூரனரின் பிரபந்தமாகிய கலா பூர்ளுேதயத் தைத் திறய்ைவு செய்தார். தம் நண்பர்களாலும் ஒருசாலை மாளுக்கர்களாலும் ஊக்கம் தரப்பெற்று இதே கட்டுரையை ஒருமுறை இராசமகேந்திரபுரத்தில் படித்ததுடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை இதே செயலைத் திரும்பத் திரும்ப செய் தார். சென்னையில் நடைபெற்ற விழாக்கள் ஒன்றனில் தலைமை வகித்த புகழ்பெற்ற புலவரும் உரையாசிரியருமாகிய வேதம் வேங்கட்டராய சாஸ்திரி என்பார் இந்த இளம் திறய்ைவாளரின் நுண்ணறிவினையும் துணிவினையும் பாராட்டிப் புகழுரை வழங்கினர். ஆயினும், இந்தப் பேரறிஞர், சில இடங்களில் ரெட்டியவர்கள் பொருள் விளக்கம் செய்யுமிடங்களிலுள்ள தவறுகளில் கவனத்தை ஈர்த்ததோடன்றி, அவர்தம் ஆராயா முன்னுறுதி பற்றியும், மிகைபடக்கூறல் பற்றியும் எடுத்துக்காட்டுவதில் தவறவில்லை. ரெட்டியவர்களின் ஆய்வுக் கட்டுரையில் அரிய, பிறிதின் சார் பற்ற தன்மையையும் ஐயப்பாட்டுக்கு இடமில்லாத நம்பிக்கை தரும் செய்தியையும் எல்லோரும் காணத் தொடங்கினர். இத்தகைய புலமைமிக்க திறய்ைவின் ஒளியில் ரெட்டி யவர்கள் தாம் மேற்கொண்டு வரைந்த திறய்ைவுக் கட்டுரை யில் தம்முடைய சில புறக்கோடி நிலைமைகளை மாற்றிக்கொள்ள இசைந்தார்; ஆனால் இவர்தம் அடிப்படை உறுதி நிலைமாருமல் நின்றது என்றபோதிலும் இந்தக் கட்டுரையின் கையெழுத்துப் படிக்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. நட்பு நிலையிலிருந்த வெளியீட்டாளர் ஒருவர் சில ஆண்டுகட்குப் பின்னர் (வாவில்லா அண்டு சன்ஸ், சென்னை) இதனை ஒரு சிறு நூல் வடிவில் வெளிக் கொணர விரும்பியபோது, ரெட்டியவர்கள் இக்கருத்தினை அறிந்து மகிழ்ந்தார். நூலின் கைப்படியைத் திரும்ப ஒருமுறை சரி பார்த்து அச்சிற்குத் தயாராக்க எண்ணிக்கொண்டிருந்தார். கேம் பிரிட்ஜில் தங்கியிருந்தபொழுதும், இந்தியாவிற்குத் திரும்பிய சில ஆண்டுகட்குப் பிறகும், இஃது என்றும் அவர் மனத்தில் இருந்து வந்தது. அவர் மைசூரிலிருந்தபோது அந்தக் கைப்படியில் கைவைக்க முயன்ருர். ஆனால், அஃது இருந்த இடத்தைக் கண் டறிய முடியவில்லை. அஃது எப்படியோ தொலைந்துவிட்டது என்றே எண்ணிவிட்டார். ஆகவே, திரும்பவும் புதிதாகச் செய் யுட்களைப் படித்து முற்றிலும் புதியதொரு கட்டுரையை எழுத வேண்டியதாயிற்று. இஃது 1914-இல் கவித்துவத் தத்துவ விசாரமு என்ற தலைப்பில் வெளியிடப்பெற்றது. தாம் ஒரு கல்லூரி மாளுக் கனக இருந்தபொழுது கலாபூர்ளுேயதமு என்ற நூலைப் பற்றி எழுதிப் படித்த ஆய்வுக் கட்டுரையை உள்ளகமாகக் கொண்டு இக்கட்டுரை அமைக்கப்பெற்றது. தொடக்கத்தில் செய்ய