பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர் சி. ஆர். ரெட்டி எண்ணிய ஒன்றைவிட இதன் நோக்கம் விரிவாகவும் நூலின் அளவு பெரிதாகவும் அமைந்தது. 1941-இல் ஆந்திரப் பல்கலைக் கழக வரிசையில் திரும்பவும் அச்சிடப்பெற்ற இந்நூல் முதற் பதிப்பின் தன் வடிவைப் பெரும்பாலும் மாற்ருமல் வைத்துக் கொண்டுள்ளது. பிங்கலி சூரனரின் நூலைக் கலந்தாயுங்கால் ரெட்டியவர்கள் தாம் பின்னர் வெளியிட்ட பிரபாவதி பிரத்யும்னமு என்ற நூலைத் தாம் முன்னர் வெளியிட்ட கலாபூர்ளுேதயமு (இது ரெட்டியவர் களின் தனிப்பற்றுக்குரிய நூல்) என்ற நூலுடன் எடுத்துக்கொள்ளு கின்ருர். செய்யுட்களை ஆய்வதற்கு முன்னர் இரண்டு இயல்களை முகவுரைகளாக அமைக்கின்ருர். இவற்றுள் ஓர் இயல் கவிதையில் கற்பனையின் இடம்பற்றி ஒதுக்கப்பெற்றுள்ளது; மற்ருேர் இயல் பாத்திரப்படைப்பின் கலை நுணுக்கத்தைப்பற்றி நுவல்வது; இதில் பண்டைய இலக்கிய முப்பெருங் கவிஞர்களும் பிரபந்தக் கவிஞர் களும் கையாண்ட முறைகளே ஒப்பிட்டு ஆராய்ந்த முடிவுடன் இலக்கியக் கலைபற்றிய நூலில் இரண்டும் ஒன்ருந் தன்மையின் இன்றியமையாமையை எடுத்துக் காட்டுகின்ருர். பிரபாவதி பரத்யும்னமு என்ற நூலில் நலிவுறும் அடையாளங்கள் தெரிவதுபற்றி இறுதி இயல் கூறுகின்றது; காதல்பற்றிய (சிருங்காரம்) கவிதையில் கலைத்திறன் அமைப்பிற்குப் பொருத்தமானது எது, பொருத்த மற்றது எது என்பதுபற்றிய தமது கருத்தையும் இங்கு முடிவுரை யாகத் தருகின்ருர். ரெட்டியவர்கள் கவிதையில் கற்பனைத்திறனுக்கு மிக உயர்ந்த இடத்தைத் தருகின்ருர். பல்வேறு முறைகளில் பண் டைய இலக்கியப் பற்றாளராக இருந்தபோதிலும் ரெட்டியவர்கள் உணர்ச்சியின் ஆழத்திற்கும் கற்பனையின் நேர்மைக்கும் அழுத்தம் தருவதில் வொர்ட்ஸ்வொர்த், கோலரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புதுமைக் கவிஞர்களில் ஒருவரை நினைவூட்டுகின்ருர். மொழி சார்ந்த புலமைக்கு இவர் மதிப்பு தருவதாக இருந்தால் அது கவிதையில் படைப்புக்கூறின் சூழ்நிலையில் அன்று தமக்கே உரிய கடுமையாகத் தாக்கும் முறையில் இவர் கூறுவது: இலக்கணங்கள், அகராதிகள், பண்டைய இலக்கியங் கள் இவற்றை ஓயாது பயில்வதால் கவிதைத் தேவிக்குப் புதிய ஆற்றல் சேர்வதில்லை. நீங்களே அநுபவித்து அறியாத உணர்ச்சிகளைப் பிறரிடம் எங்ங்ணம் எழுப்புதல் இயலும்? உலகியல் இன்பங்கட்குக் கூருணர்வுடன் இருக்கும் சாதா ரண மனிதன் அவற்றை உணராத மரக்கட்டை போன்ற புலவரைவிடப் பன்மடங்கு சிறந்தவனாவான்.