பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவாளர் 43 புலமையைப் பகட்டாக வெளிக்காட்டிக்கொள்வதில் தற் பெருமை கொண்டும் வழக்கற்ற கவிதைச் சொல் வளத்தால் போர்த்தப்பெற்ற மரபு வழி உருக்காட்சிக்கு அதிகமாக இடங் கொடுத்தும் திகழும் இடைக்காலத்து பிரபந்தக் கவிஞர்களிடம் இவர் பொறுமையைக் காட்டுவதில்லை. தாம் மேற்கொள்ளும் உருக்காட்சியை (முழுமதியத்தை யொத்த முகங்கள், தாமரை இதழையொத்த கண்கள், கொடி போன்ற கைகள், கண்ணுக்குப் புலகைாத இடைகள், அன்ன நடைகள் இவை போன்றவை) உண்மை வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கி அதிலிருந்து எடுத்துக் கொள்வதைவிட அகராதிகள் அணி இலக்கண நூல்கள் இவற்றி லிருந்து எடுப்பதை அடிக்கடி ஏளனம் செய்தார். இத்தகைய நூல்களினின்றும் திணைவளத்தைச் சிறிதும் மாற்ருமல் அப்படியே எடுத்து அட்டவணைப்படுத்திக்கொண்டு புவியியல் மாற்றங்கள், பருவ வேறுபாடுகள் இவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாது அவற்றை வெறுக்கும் அளவிற்குக் கையாண்டிருப்பதை நன்கு சுட்டிக்காட்டுகின்ருர். அறிவுக் கூர்மையுள்ள படிப்போருக்கு இவை மிகுந்த சோர்வினைத் தருபவையாக உள்ளன. கவிதையில் கையாளப்பெறும் மொழியில் அணிவகைகளிருப் பது ஒரளவு பொறுத்துக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், அவற்றை மட்டுமீறி தேவையில்லாத இடத்திலும் பயன்படுத்து வதை ரெட்டியவர்கள் தீவிரமாக கண்டிக்கின்ருர். ஒரு பொருள் ஏராளமான பொருளுடன் ஒப்பிடப்பெற்ருல் உண்மையான பொருளின் வருணனை அதன் அடையாளத்தை இழக்கச் செய்து விடுகின்றது என்பது ரெட்டியவர்களின் வாதம். மரபுவழிப் புலவர் களால் வருணனை வேண்டுமென்பதற்காக வருணனை தரப்பெறுவ தற்கு இவர் அதிகமான முக்கியத்துவம் தருவதில்லை. வருணனை தரப்பெறும் செயலில் மிதமிஞ்சிய செயற்கைச் சொற்புரட்டுகளைச் சேர்ப்பதையே ஓர் ஏற்பாடாக மேற்கொள்வதை இவர் சிறிதும் பொறுத்துக்கொள்வதில்லை. இந்நிலை மறைமுகமாக மொழியில் போதுமான அளவு எழுவாய்ச் சொற்கள் இல்லாமையைக் குறிப் பிடுகின்றது என்று சில மொழி நூல் வல்லுநர்கள் குறிப்பிடு வதை இவ்வாசிரியர் ஒப்புக்கொண்டார் எனத் தோன்றுகின்றது. காவிய மாந்தர் படைப்பிலும், மரபு முறைப்படி அவர்களைப் பிரித்துக்காட்டுவதிலும் ரெட்டியவர்கள் எழுப்பும் மறுப்புகள் மேலும் உறுதியாக உள்ளன. கலைத்திறமைக்குகந்ததன்று என்று கூருவிடினும், மனிதர் ஒருவரை முற்றிலும் உயர்ந்தவர் என்ருே அல்லது முற்றிலும் தாழ்ந்தவர் என்ருே, முற்றிலும் நற்குணம் வாய்ந்தவர் என்ருே, அல்லது முற்றிலும் கொடியவர் என்ருே இனங்காட்டுவது இயற்கைக்குப் புறம்பானது என்பதை விடாப் பிடியாகக் கொண்டிருந்தார். ஏனென்ருல், அம்மனிதர் நற்