பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் சி. ஆர். ரெட்டி குணமும் இழிகுணமும், பெருந்தன்மையும் குறுகிய நோக்கமும், வேறு பல பண்புகளும் கலந்த கலவைக் குணமுடையவராக தான் இருக்கலாம், அல்லது இருக்க முடியும். மானிடப் பாத்திரம் முற்றிலும் மாசற்றவராகவும், அல்லது முற்றிலும் மாசுடையவ ராகவும் இருப்பதில்லை. அப்பாத்திரம் சாதாரணமாக ஒளியும் நிழலும் கொண்டதாகவும், மங்கலான பண்புடையதாகவும், அறிவு மழுங்கலாகவும், அறிவுக்கூர்மையாகவும் இருந்து கொண்டுள்ளது. வாழ்க்கையைப் போலவே, இலக்கியமும் இயற்கையாக வாழும் பாத்திரங்கள் உலவுவதாக அமைதல் வேண்டும்; இயந்திரப் படைப்பான மாதிரிப் பாத்திரங்கட்கு இங்கு இடமில்லை. பாத்தி ரங்கள் முழுத்தன்மையுடன் இலங்கவேண்டும்; ஒரு தன்மையான பாத்திரத்திற்கு இங்கு இடமில்லை. மாற்றத்திற்கு உட்பட்டவை யாக இவை அமைதல் வேண்டும்; காரணம், மாற்றம்தானே வாழ் வின் சட்டம். இவர் வகுத்தமைத்த ஒப்பளவு விதிகளை வைத்து நோக்கினல், இராமாயணப் பாத்திரங்களைவிட மகாபாரதத்தின் பாத்திரங்கள் விளக்கமாகவும் உயிர்த்துடிப்புடன் தோன்றுவனவாகவும் ரெட்டி யவர்கட்குத் தென்படுகின்றன. சாதாரண மக்கள் நெடுங்கால மாக மனவெழுச்சிகள், தப்பெண்ணங்கள், உறுதியற்ற நிலைகள் இவற்றிற்கு உட்பட்டிருப்பதுபோல், வீமன், அர்ச்சுனன், திரெள பதி, துரியோதனன், பிற பாத்திரங்கள் இராமாயணத்தில் இவர் கட்கு நேரான பாத்திரங்களைவிட உட்பட்டிருப்பது இவர்களை உண்மையான பாத்திரங்கள் என நம்மை நம்ப வைக்கின்றன. இராமாயணப் பாத்திரங்களில் இராமன், இலக்குவன், சீதை, அநுமன் முதலியவர்களைப் போல பல பாத்திரங்கள் குறிக்கோள் கட்குப் பண்பிகளாக உருவகம் செய்யப் பெற்றவையாகவோ அல்லது இராக்கதர்கள், வானரங்கள் முதலியவர்களைப் போல் பழக்கப்பட்ட மாதிரிப்படிவங்களாகவோ அமைந்துள்ளன. பிரபந் தங்களில் காணப்பெறும் பாத்திரங்கள் இவற்றிற்கு முன்னர் எழுந்த இலக்கியங்களில் காணப்பெறுபவற்றின் மங்கலான மறு பகர்ப்புகளாக அமைந்து மரக்கட்டைப்போல் உயிரற்ற தோற் றத்தை அளிப்பதால் இவை பற்றி இவருக்குச் சிறிதளவேனும் மனநிறைவு தரவில்லை. நம்மைச் சுற்றிலும் காணப்பெறும் ஆண்கள் பெண்கள் இவர்களிடம் காணப்பெறும் பொதுப் பண்புகள் இப்பாத்திரங்களிடம் சிறிதேனும் இல்லாதிருப்பதால் இவர்களிடம் வளர்ச்சியும் இல்லை; மாற்றமும் இல்லை. வேறு வகையிலும் ரெட்டியவர்கள் பிரபந்தக் கவிஞர்கட்குத் தரும் மதிப்பைவிட தெலுங்கு மகாபாரதத்தை இயற்றின பண் டைய மும்மூர்த்திகட்கு (நன்னயர், திக்கனர், எர்ரப்பிரகடர்) அதிக மதிப்பைத் தருகின்ருர். தனித்துறை மரபு முறையில்