பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவாளர் 45 நோக்கினால், பண்டைய மூன்று கவிஞர்களும் வட மொழியி லுள்ள ஓர் இலக்கியத்தைத் தெலுங்கில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தனர்; பிரபந்தக் கவிஞர்களோ தம்முடைய கற்பனையி லிருந்து முற்றிலும் புதிதாக ஒன்றைப் படைப்பதில் முனைந் திருந்தனர். முற்றிலும் முரண்பாடான முறையில் பண்டைய மூன்று கவிஞர்களிடமும் பிரபந்தக் கவிஞர்களிடமிருப்பதைவிட பிறிதின் சார்பற்ற தன்மையும் கவிதைத்திறனும் அதிகமாகவே அமைந்துள்ளன. பண்டைய மூவரும் சிறந்த புலமையுள்ளவர்க ளாக இருந்ததுடன் உயர்தரமுள்ள கவிஞர்களாகவும் திகழ்ந் தமையே இந்நிலைக்கு உண்மையான ஒரு காரணமாகும். அவர்தம் கற்பனை கலப்பில்லாததாகவும் நன்முறையில் கட்டுப்படுத்தப் பெற்றதாகவும் இருந்தது என்பதையும், அவர்தம் பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புள்ளவர்களாகவும் நம்பத் தகுந்தவர்களாகவும் இருந்தனர் என்பதையும், அவர்தம் வருணனைகள் இயற்கை யாகவும் உண்மைக்குப் புறம்பற்றதாகவும் இருந்தன என்பதையும் ரெட்டியவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார். அவர்கள் மொழி பெயர்க்கவில்லை; உருவத்தையே மாற்றியமைத்தனர். படைப்புச் சார்ந்த தாயக மூலத்தின் கட்டுப்பாட்டிலிருந்தமையால் அவ்வாறு செய்வதைவிட அவர்கட்கு வேறுவழி இல்லை. மாருக, பிரபந்தக் கவிஞர்கள் தம் சொந்தக் கதைகளையே கையாண்டமையால் அவர்கள் அதிக அளவு சுதந்திரத்துடன் இயங்கியிருக்கமுடியும் எ ன் ப ைத எதிர்பார்க்கலாம். ஆனால், நடப்பு உண்மையில், அவர்தம் படைப்புகள் அச்சுவார்ப்படப் பொருள்கள்போல் இருந்தன; பிறிதின் சார்பற்ற தன்மையோ அல்லது கவிதைக்குத் தேவையான கற்பனையோ செயற்பட்டன என்பதற்குச் சிறிதளவேனும் சான்று இல்லாத முறையில்அவர்கள் படைத்த பாத்திரங்கள் பழமைப்பட்டு வளர்ச்சியற்றுப்போன நிலையில் காட்சியளித்தனர். ஒரு பிரபந்தத்திலுள்ள மாந்தரின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் இவற்றைத் தவிர, அது முற் றிலும் மற்ருெரு பிரபந்தம்போல் அமைந்திருந்தன. புலமையைப் பகட்டாக வெளிப்படுத்தும் தேவையற்ற நிலை அங்கு இருந்தது. ஒரு சிறந்த கவிதை உருவாவதற்குத் தேவையான இன்றியமை யாத தாயக மூலங்களை இங்குக் காண முயல்வது வீணான செயலா கும். நல்ல ஒரு கவிதையைக் காண்பதென்பதும் இத்தகைய செயலேயாகும். பழக்கப்பட்ட ஒரு படிவ முறையைப் பின்பற்ற வேண்டுமாயின் பதினெட்டு வகையான வருணனைகளும் (அஷ்ட தசா வருணனைகள்) ஒன்பான் சுவைகளும் (நவரசங்கள்) ஒவ் வொரு பிரபந்தத்திலும் அமைதல் வேண்டும். உண்மையாக இவை நிகழ்ச்சிக்கு உரிமையளிக்கின்றனவா, அன்ரு என்பது யோசிக்கப்பெறவேண்டிய தொன்றன்று. நிலைமை அங்கு இல்லா