பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் சி. ஆர். ரெட்டி விடினும், தான் நுழைக்கும் ஒரு வருணனையின் பொருட்டாக வாவது ஒரு நிலைமையைப் புதியதாகப் புனைதல் வேண்டும். வழக்க மாகக் கதையின் உள்ளடக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும்; அந்தச் சிறிய உள்ளடக்கமும் நம்பத்தகுந்ததாக இராது. பொது வாக ஒர் இளவரசனுக்கும் ஓர் இளவரசிக்குமிடையே நேரிடும் அரும்பெறல் உணர்ச்சி வாய்ந்த காதலைச் சுற்றிப் பின்னப்பெறும் நிகழ்ச்சியே கதையின் முக்கிய இணைப்புத் தொடர்பாகும். காதல் தெரிவிக்கும் தூதன வடிவிலும், தலைவனின் தோழன், தலைவியின் தோழி இவர்கள் வடிவிலும் கதையின் துணை இணைப்புத் தொடர் புகள் அமைக்கப்பெறும்; பரத்தையரும் பார்ப்பனப் புரோகிதர் களும் கூட அங்கு இடம்பெறுவர். கதை கூறுவதிலும் உரையாடல் களிலும் மரபு வழி முறைப்படி அமைக்கப்பெறும் சிலேடை (இரு பொருள் தருவது), நிலவினைப் பழித்தல் (சந்திரோபாலம்பனம்), காமனைப் பழித்தல் (மன்மதோபாலம்பனம்) போன்ற உறுப்புகள் தெலுங்குப் பிரபந்தங்களின் தவருத கூறுகளுள் சிலவாகும். பிரபந்த இலக்கியங்களில் சிறப்புடன் அமைந்தவை இல்லை என்பதில்லை. தம் சிறந்த பண்புகளால் மட்டிலும் குறைந்தது ஆறு பிரபந்தங்கள் தனிப்படப் பிரிந்து நிற்கின்றன. அல்லசானி பெத்தனவால் இயற்றப்பெற்ற மனு சரித்திரமு, இராமராஜ பூஷணரால் இயற்றப்பெற்ற வசு சரித்திரமு, சேமகூர வேங்கட கவி யால் செய்யப்பெற்ற விஜய விலாசமு என்ற மூன்று பெரிய இலக்கி யங்களுக்குத் தெலுங்குக் கவிதையில் உயர்ந்த இடங்களைத் தரு கின்ருர் டாக்டர் ரெட்டி. இந்தப் பட்டியலுடன் டாக்டர் ரெட்டி தனிப்பற்று கொண்ட பிங்கலி சூரனரால் செய்யப்பெற்ற கலா பூர்ளுேதயமு என்ற நூலும், சிறிய அளவில் அதே கவிஞ ரால் இயற்றப்பெற்ற பிரபாவதி பிரத்யும்னமு என்ற நூலும் சேர்க்கப்பெறலாம். இவற்றுள் சிறந்தவை கூட மகிழ்ச்சிகள்-துயரங்கள், போராட்டங்கள்-துன்பங்கள், நம் பிக் கைகள்-நோக்கங்கள் இவை யடங்கிய சாதாரண மக்களின் வாழ்க்கையின் உரு நிழலைக் காட்டவில்லை என்ற ரெட்டியவர்களின் பொதுக் குறைபாட்டி னின்றும் விலக்குப்பெறவில்லை. இவை சமூகத்தில் பொறுக்கி எடுத்த சிறந்த பகுதியினரின் இலக்கியத்திற்கு அறிகுறியாகத் திகழ்ந்தன. இந்த வகையில் ஐரோப்பாவின் சமகாலத்து இலக்கியத்தினின்றும் இவை அதிக வேறுபாட்டுடன் திகழ்ந்தவையாகும். ஐரோப்பிய இலக்கியங்கள் அரச குடியினரின் செயல்களைப் புகழ்ந்து கூறினும், அவை ஏழை உழவர்கள், சாதாரணப் போர் வீரர்கள், சிறிய கடை வைத்திருப்போர். எஞ்சிய தாழ்நிலையிலுள்ள குழுக்கள் இவர்தம் வாழ்க்கையைப் புறக்கணிக்கவில்லை. இன்றைய ஆந்திரத்தில் இலக் கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளி மிக