பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனய்வாளர் 47 விரிந்து காணப்பெறுகின்றது. ரெட்டியவர்களின் கருத்துப்படி, இது சமூக உணர்ச்சியே இல்லாத நிலையேயன்றி, உண்மை வாழ் வின் குருதியே இல்லாமையால் இலக்கியத்தில் ஒருவித சோகை யையும் விளைவித்துவிட்டது. முரண்பாட்டு நாடகமும் உணர்ச்சி யை எழுப்பக்கூடிய துயர் நாடகமும் அங்கு இருக்க முடியவில்லை. கலா பூரணுேதயமு மட்டிலும் பல்வேறு காரணங்களால் ரெட்டியவர்களின் கவனத்தில் தானகப் புகழ் பெறுகின்றது. இவற்றுள் கற்பனையாற்றல், பொருத்தமான வருணனை, உயிரோ வியம் போன்ற பாத்திரப் படைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றுடன் இடத்திற்கேற்றவாறு கவிஞர் கையாளும் யாப்புத் திறனும் அடங்கும். இதன் கதை புராணமும் புதினமும் கலந்த ஒரு கலவை; நூலாசிரியரின் தேவைக்கேற்றவாறு புராணக்கூறை விட புதினக் கூறுதான் இதில் அதிகம் உள்ளது. தொடர்ந்து வரும் நொடிக் கதைகளிலும், பாத்திரங்களின் நேருக்கு நேர் மோதல்களிலும் பயின்று மேற்கொள்ளப்பெற்ற உணர்ச்சிச் சிக்கல் அமைந்துள்ளது. அரம்பை-நாளசுபரன், கலாபாஷிணிமணிகந்தாரன், அபிநவகெளமுதி-மதுரகலாசை போன்ற காத லர்கள் பொருத்தமாக இணைவதில் பல நேர்-ஒட்டங்களும் எதிர் -ஓட்டங்களும் உள்ளன. இவற்றுடன் சரசுவதி-சதுர்முகன், சுகத்ரி-சாலினன் என்ற திருமணமான இணைகளின் வியப்பூட்டும் அருந்திறல் புத்துணர்ச்சியும் கலந்து செல்லுகின்றது. முழுக் கதைப் பொருளிலும் பலவகைப் பெருக்கம் ஏற்படுவதற்கேற்பப் புதுமை உணர்வூட்டுகின்ற கிளைக் கதைகள் ஆங்காங்கு இணைக்கப் பெற்றுள்ளன. நாட்டுப்புறச் சோலை சூழ்ந்த பின்னணியிலும் புத்துயிரூட்டும் பேச்சு-செயல்களின் கபடில்லாத தன்மையிலும் சுகத்ரி-சாலினன் என்ற இணை செகப்பிரியரின் விரும்பிய வண்ணம் (As you like it) என்ற நாடகத்தில் காணப்பெறும் ரோச லிண்ட்-ஆர்லேண்டோ என்ற வன இணைப் பாத்திரங்களை நினை ஆட்டுகின்றது. உணர்ச்சி தூண்டும் நிலைமைகட்குக் கொண்டு செலுத்தும் அரம்பை-நளகூபரனின் தவருன ஆளடையாளங்கள் 56-passfloor Gssolāgh-Égil (The Comndy of Errors) stairsp BitL கத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. ஒருவர் இருப்பை மற்ருெருவர் அறியாத நிலையில் செகப் பிரியரும் நெருங்கிய சமகாலத்தவர் என்பதை நாம் நினைவுகூரும் போது டாக்டர் ரெட்டி தனிச்சிறப்புக்குரிய இணையான இருவரை ஒப்பிட்டு நோக்கினர் என்பதை அறியுங்கால் உண்மையிலேயே நாம் பெருமகிழ்ச்சி அடைகின்ருேம். பிற்காலத்திய இலக்கியமாகிய பிரபாவதி பிரத்யும்னமு என்ற நூலில் மிகுபயன் விளைவிக்கும் பழமொழிகளேயும் கூற்று களையும் அடிக்கடிப் பயன்படுத்துவதிலிருந்து டாக்டர் ரெட்டி அப்