பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை பல்லாண்டுகளாகவே என்னைக் கவர்ந்த ஒரு பொருள்பற்றி எழுதுமாறு ஊக்கம் அளித்த சாகித்திய அக்காதமிக்கும்; மிகச் சிறந்த நிறுவனமாகத் திகழும் புது தில்லி நேரு நினைவு அரும்பொருள் காட்சியகம்-நூலகம் இவற்றின் ஒரு பகுதியாகிய ஆயப்புரையில் (archives) டாக்டர் சி. ஆர். ரெட்டியவர்களின் ஏடுகளைப் பார்வையிடுவதற்கு இசைவு தந்த அந்த நிறுவனத்தின் இயக்குநர் திரு. பி. ஆர். நந்தா அவர்கட்கும்; ஆயப்புரையின் இயக்குநர் திரு. வி.சி. ஜோஷி அவர்கட்கும்; டாக்டர் சி. ஆர். ரெட்டியின் கவிதைக்குத் தாம் எழுதி யுள்ள ஆழ்ந்த உரைப் பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்ள இசைவு தந்த ஐதரபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத் தெலுங்குத்துறைத் தலைவர் டாக்டர் டி.வி. அவதானி அவர்கட்கும்; சென்னையிலுள்ள திரு. கே. சி. தாசரதி அவர்கட்கும்; பல்வேறு வழிகளில் தவருது துணை செய்தும் யோசனை கூறியும் உதவிய ஐதராபாத்தைச் சார்ந்த எழுத்தாளரும் இதழாசிரியருமான திரு என். இன்னய்யா அவர்கட்கும்; தம்முடைய கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட ஐதரபாத் தெலுங்கு அக்காதெமி ஆய்வு அலுவலர் டாக்டர் ஏ. இரமாபதி ராவ் அவர்கட்கும்; தம்முடைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எனக்குப் பகிர்ந்தளித்த சோவியத் நாடு’ என்ற இதழில் பணியாற்றும் திரு. சி. இ. ராவ் அவர்கட்கும்; டாக்டர் சி. ஆர். ரெட்டியின் நெஞ்சளவு ஒளிப்படத்தை எனக்கு நல்கிய தெலுங்கு பாஷா சமிதியைச் சார்ந்த திரு. பி சுப்பராயன் அவர்கட்கும்; இந்த ஒப்படைப்பினை விரைவில் நிறைவு செய்யுமாறு அடிக் கடித் துண்டிய என் துணைவி ஹேமலதாவுக்கும்; மேலட்டைப் பக்கங்களை அணி செய்யும் டாக்டர் சி. ஆர். ரெட்டியின் அழகிய உரு விளக்கப் படத்தை நல்கிய திரு. பி.டி. சர்மா அவர்கட்கும்; இறுதியாக, என்னுடைய கைப்படியை மிகத் திருத்தமாகத் தட்டச்சு செய்த திரு. கே. எஸ். பாலசுப்பிரமணியம் (சென்னை), திரு. ஆர். ஆர். சாலோத்ரா (தில்லி) ஆகியோருக்கும்; என் இதயம்கனிந்த நன்றி உரித்தாகும். புதுதில்லி மே, 19 73 டி. ஆஞ்சனேயுலு