பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர் சி. ஆர். ரெட்டி பிரபந்தத்தின் நடையில் ஒருவித பக்குவத்தையும் மனித இயல் பின் அநுபவ வளத்தையும் காண்கின்ருர். ஆனால், அதற்கு ஒத்தாற்போல் அவர் கவிதைக்குரிய உயிர்நிலை உறுப்பாகிய கற் பனையின் கணிசமான வீழ்ச்சியையும் காண்கின்ருர், கவிஞர் சிலே டையையும் (இருபொருள் தருவது) துவியார்த்தியையும் (இரண் டுக்கு மேற்பட்ட பொருள்களைத் தருவது) பயன்படுத்தும் பழக் கத்திற்கு அதிக இடங்கொடுக்கும்பொழுது, இருக்க முடியாத கவிதைக்குரிய சொற்புரட்டில் ஈடுபடும் மற்ருெரு பழக்கத்தி னின்றும் தம்மை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ளார். கவிதை இலக்கியத்தில் கதையைக் கூறும்பொழுது, வர லாற்று முறைக்கு மாருக காரணகாரியத் தொடர்புடைய முறை யையே ஆசிரியரின் மிகுதியாக விரும்பத்தக்க முறையாகக் கொள் வதையே டாக்டர் ரெட்டி ஆதரிக்கின்ருர். ஏனென்ருல், இது கலைத்திறமை வாய்ந்த நோக்கத்திற்குப் பயன் விளைவிப்பதாக அமைதல் கூடும், பாத்திரப் படைப்பு வளர்ச்சியைப்பற்றி இவர் நன்கு வரையறுக்கப்பெற்ற எண்ணங்களைக் கொண்டுள்ளார். கவிஞரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இவற்றை ஒவ்வொரு கட்டத் திலும் வெளிப்படுத்திக் காட்டுகின்ருர். இவர் கூறுவது: தொகுதியாக (அல்லது இனமாக) விரித்துரைப்பது அகராதி ஆசிரியரின் பணியாகும். தனித் தன்மையளிக்கப் பெற்ற உருக்காட்சியைத் துரண்டுவது ஒரு கவிஞனின் செய லாகும். இதைச் செய்ய முடியாதவர் ஒரு புலவராக இருக்க லாம்; ஆனல் ஒரு கவிஞனக இருக்க முடியாது. கவிஞன் தன் மனத்தில் படைத்த ஓவியம் ஒன்றைச் சொற்களின் வாயிலாகப் படிப்போர் தம் அதுபவத்தால் எய்தப்பெறுவ தற்குத் துணைசெய்யும் ஆற்றலை உள்ளடக்கமாகக் கொண் டிருப்பதுதான் கவிதையாகும். வேருேர் ஆற்றினின்றும் வேறுபடாமல் ஒர் ஆற்றை வருணித்தால் அது கலையாகாது. இந்த ஆறு தனக்கே உரிய தனிச் சிறப்பினைப் பெற்றிருத்தல் வேண்டும். இம்மாதிரிதான் ஏரிகள் போன்ற பிற இயற்கைப் பொருள்களும் தனிச்சிறப்பை அடைதல் வேண்டும் ..... மானிடப் பாத்திரங்களை வருணிக்கும் பொழுதும் இத்தகைய பார்வையை இழத்தல் கூடாது. இந்த நீண்ட காலத்திற்குப் பிறகு (முதன் முதலாக எழுதப் பெற்று எழுபதிற்கு மேற்பட்ட ஆண்டுகள் கழிந்த பிறகு) இந்தப் பொதுக் குறிப்புகள் இக்கால இலக்கியத்தைப் பற்றிய அடிப் படைக் கொள்கைகளிலும், மேட்ைடுத் திறய்ைவு முறைகளிலும் பழக்கப்பட்டவர்கட்கு சாதாரணமானவை போல் தோன்றலாம்.