பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவாளர் 49 ஆளுல் ஒரு நூற்ருண்டுக்குப் பிறகு இவை மேல் காற்றின் அமை திப்படாத உரத்துடன் அமைதியான தெலுங்கு இலக்கியப் புலத் தில் பேரடியை விளைவித்தன. மரபு வழிபட்ட சில இடங்களில் இவை புரட்சிகரமானவை எனக் கருதப்பெற்றன. பண்டைய அணி இலக்கண நூல்களினின்றும் இயல்களையும் செய்யுட்களையும் மேற்கோள்களாக எடுத்துக்காட்டி டாக்டர் ரெட்டியின் வாதங் களே எதிர்த்துத் தாக்க முயன்ற சில தெலுங்குப் புலவர்கள் இருக் கத்தான் செய்தனர். கவித்வத் தத்துவ விசாரமு என்ற ஆய்வு நூலே மிக விரிவாக மறுத்துரைத்த முழுமையான நூல்களும் எழுந்தன. ஆனல், புதுப்போக்கினை விரும்பும் இக்கால எழுத்தா ளர்கள் கிட்டத்தட்ட இலக்கியத் திறனாய்வின் ஒரு புதிய நற் செய்தியாகக் கொண்டனர். காரணம், ரெட்டியவர்கள் கவிதை யின் புறக்கூறுகளினின்றும் உள்ளமைப்பின் உயிருள்ள பகுதியிலும், மொழியியலினின்றும் தத்துவத்திலும், உடலினின்றும் ஆன்மாவி லும் திறனாய்வின் அழுத்தத்தை இடம்பெயரச் செய்ய முயன்ருர். இலக்கியத் திறனய்வாளர் என்ற முறையில் டாக்டர் ரெட்டி சில பண்டைய இலக்கியப் பாத்திரங்கட்குப் புதிய விளக்கம் தரு வதிலும், சில நூல்களையும் ஆசிரியர்களையும் புதிய முறையில் மதிப் பீடு செய்வதிலும் கணிசமான அளவிற்குப் பங்கேற்றுள்ளார். தெலுங்கு மகாபாரதம் இவருடைய தனிப்பற்றுக்குரிய நூலாக இருந்ததுபோல் அதிலுள்ள திரெளபதி என்ற பாத்திரமும் இவ ருடைய தனிப்பற்றுக்குரியவளாக இருந்தாள். பஞ்சமி என்ற தம் முடைய ஐந்து கட்டுரைகள் கொண்ட நூலில் சேர்க்கப்பெற்றுள்ள கட்டுரையொன்றில் சீதையையும் திரெளபதியையும் அறிவுக் கூர்மையுடன் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார். இந்த நாட்டில் சீதை ஊழிக் காலம் தொட்டு மிகச் சிறந்த பெண்ணினத்தின் மூலமாதிரியாக இருந்து வந்துள்ளாள். ஆலுைம், ரெட்டியவர்கள் பற்றுறுதி, பொறுமை, குடிப்பண்பு, துன்பத்தை அநுபவிக்கும் திறன் போன்ற சீதையின் நற்குணங்களில் தனி ஈடுபாட்டைக் காட்டு கின்ருர். ஆனல் திரெளபதிதான் தன்னுடைய துணிவாலும் செயலாற்றும் திறனுலும், விரைந்து மாறும் இயல்பாலும் டாக்டர் ரெட்டியின் ஆண் இதயத்தை அதிகமாகக் கவர்கின்ருள். டாக்டர் ரெட்டியின் சொற்களிலேயே எடுத்துக்காட்டினல் : திரெபதியைப்போலவே சீதையும் உலகத்தாரின் இதயத் தைக் கவர்ந்துள்ளாள்; ஆனால் அவள் இல்லத்திலுள்ள ஒரு விளக்கேயாவள்; கொழுந்துவிட்டெரியும் அனற்பிழம்பு அல்லள். பொதுமக்களுக்குரிய மன்றத்திற்கும் பொருத்த மானவள் அல்லள். இவற்றின் சுவையும் மனப்பாங்கும் இல்லாத ஒர் இல்லக்கிழத்தி இவள். இவள் சொல் நய