பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர் சி. ஆர். ரெட்டி முடைய வாதப்போருக்கும் பொதுமன்றப் போருக்கும், நேருக்கு நேர் நேரிடும் மோதல்கட்கும் சிறிதும் பொருத்த மானவள் அல்லள். இவள் அமைப்பு முழுவதும் வெல்லம் போல் இனிமையானது; மிளகு போன்ற காரசாரத்திற்கு சிறிதும் இவளிடம் இடம் இல்லை... - - - - - திரெளபதியைப் பொறுத்தமட்டிலும், இக்கால அமெரிக்கப் பெண் தலைவர்களும் இவளுடன் ஒப்பிடப்பெறும் பொழுது அவர்கள் தம்மை அடிமைகளாக உணர்வர். இவ ளுடைய அறிவுத்திறனும் பாகுபடுத்திப் பார்க்கும் திறனும், பொது அறிவும் கூரிய அரசியலறிவும், துணிவும், உயர் பண்பும், தனிப்பட்ட சொந்தக் கவர்ச்சியும் இவளுடைய சுதந்திர உணர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன. தன் னுடைய கணவன்மார்களைக் கடிந்தால் அவர்கள் இவளைக் குறை கூருர்கள்; பிறரும் அந்நிலையில்தான் இருந்தனர். இவள் தனி முதன்மையுள்ளவள்; குறைபாடே இல்லாதவள். இவளைப் போன்றவர்கள் இவளுடன் தொடர்புள்ளவர் களால் மட்டுமன்றி எல்லாராலும் அன்பு காட்டப்பெறுகின் றனர்; இல்லை, மதிப்புடன் போற்றப்பெறுகின்றனர்; பூசனை செய்யப்பெறுகின்றனர் . . . . . இவர்களிடம் இவ்வுலகம் தன் னுடைய நிறைவினையே காண்கின்றது. ’’ நீண்டகாலமாகப் பெண்களை அழகுப்பாலார், வலுவற்ற பாண்டம் என்று கருதிப் பழக்கப்பெற்றவர்கட்கு இவளுடைய துணிவு சிலரிடம் அதிர்ச்சியை விளைவித்தல் கூடும். ஆனல் டாக்டர் ரெட்டிக்கு இவள் அன்பு, இரக்கம் இவை முதல் சீற்றம், திகில் வரையிலும்; பெண்களுக்கே உரிய அழகு முதல், ஆண்களுக்கே உரிய வலிமை வரையிலுமுள்ள எல்லாப் பண்புகளும் நிறைந்தவ ளாக, எல்லாச் சுவைகளின் திருவுருவாகக் காட்சி அளிக்கின்ருள். சுருங்கக்கூறின், உண்மையில் முழுமை அடைந்த பெண் என்ற டாக்டர் ரெட்டியின் உயிர் ஒவியம் போன்ற நினைவுப் படிவத் திற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்பவள். திரெளபதியை அடுத்து வீமன் இவர் இதயத்தில் மென்மை யான ஒரு மூலையில் இடம் பெறுகின்ருன். ஒளிவு மறைவு இல் லாது திரெளபதிக்கு உதவுவதைத் தவிர, எளியவர் வலுவற்றவர் இவர்கள் பொருட்டும் உதவும் வீமனின் அருங்குணம் இவர் மனத் தைக் கவர்கின்றது. சாதாரணமாகப் பேச்சு முறையில் துரியோ தனன் மகாபாரதத்தில் காணப்பெறும் நான்கு கொடியவர்களில் (துஷ்டசதுஷ்டயர்) ஒருவகை இருக்கலாம். எனினும், டாக்டர் ரெட்டியைப் பொறுத்தமட்டிலும், இவன் நாடகமேடையில் விடு விக்கப்பெருத போக்கிரி அல்லன்; ஆனல் இவன் மதிப்பும்