பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வாளர் 51 ஆண்மையும் உடைய துன்பியல் நாடகத் தலைவன். செகப்பிரி யரின் துன்பியல் நாடகத் தலைவர்களைப் போலவே, ஊழ்வலிப் பட்ட வலுவின்மையைக்கொண்டு திகழ்கின்ருன்; நற்குணம் வாய்ந்த மனிதர்களிடமிருந்து வரும் அறைகூவலை எதிர்த்து நிற்க முடியாமல் இவனது செருக்கும் பொருமையும் ஊறுபடத்தக்க நிலையை உண்டாக்குகின்றன. பண்டைய தெலுங்கு இலக்கியங்களுள் மகாபாரதத்தை அடுத்து டாக்டர் ரெட்டியின் கவனத்தைக் கவர்ந்த இலக்கியம் அரங்கநாதரால் செய்யப்பெற்றதாகக் கருதப்பெறும் அரங்கநாத இராமாயணம் ஆகும். இஃது எதுகை நயம் வாய்ந்த ஈரடிச் செய்யு ளால்-குறட்பாக்களால்-ஆனது. டாக்டர் ரெட்டி பெருவழக் காகவுள்ள நம்பிக்கைக்கு அதிக மதிப்பு தருவதில்லை; மரபு வழி யாக வரும் கொள்கையையும் இவர் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தப் பொருள்பற்றித் தாம் கொண்ட நிலையை விளக்கும் முறை யில் இவர் கூறுவது: 1919-இல் நெல்லூரில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில், அரங்கநாதரைக் கட்டுக்கதை என்றும், பொய்ப் புனைவு என்றும் விலக்கித் தள்ளினேன்; அரங்கநாதர் என்பது ஒருவருடைய பெயரா, அல்லது ஒரிடத்தின் பெயரா, அல்லது தெய்வத்தின் பெயரா என்பது இன்னும் உறுதிப் பெறவில்லை; இந்த இராமாயணத்தில் மட்டிலும் காணப் பெறும் அகச்சான்றினைத் தோற்கடிக்கக்கூடிய வேருேர் புறச்சான்றினை எடுத்துக்காட்ட இயலவில்லை; உரிமையற்ற நிலையில் கோன புத்தர்தான் இதன் ஆசிரியர் என்று கொண் டமை நேர்மையற்றது ... டாக்டர் இராமலிங்கா ரெட்டியின் கருத்துப்படி, கோன புத்த ரெட்டிதான் இந்த நூலின் ஆசிரியர் என்று உறுதியாகக் கொள்ள முடியும். 13-ஆம் நூற்ருண்டில் காக்கதீய அரசர்கள் ஆட்சி யின் கீழ் நிலமானியத் தலைவர்களின் கால்வழியைச் சார்ந்தவர் இவர். இவர் கிட்டத்தட்ட கி.பி.1210-இல் பிறந்தவர்; இந்த இலக்கி யத்தை இவர் தம் தந்தையார் விட்டலதரணி பூபாலர் என்பாரின் கட்டளைப்படிக் கிட்டத்தட்ட கி. பி. 1240-இல் இயற்றினர். அகச் சான்றினைக் கொண்டும் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டும் டாக்டர் ரெட்டி இந்த முடிவுக்கு வருகின்ருர். அரங்கநாதர் என்ற பெயரைப் பொறுத்து இவருக்குக் கிடைத்த இரண்டு விளக் கங்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்ருர். இந்த நூலின் ஆசிரியர் புத்த பூபதி தம் நூலைத் தம் தந்தை யாராகிய விட்டலருக்கு அன்புப்படையலாக்கி இருப்பதாலும்,