பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர் சி. ஆர். ரெட்டி விட்டலர் என்பது இறைவன் பாண்டுரங்கரைக் குறிப்பதாலும், இஃது அரங்ககாத இராமாயணம்” என்ற மற்ருெரு சாட்டுப் பெயரை அடைந்திருத்தல் கூடும். இஃது ஆந்திர சாகித்திய பரிஷத் தைச் (காக்கிநாடா) சார்ந்த ஜயந்தி இராமய்ய பந்துலு என்ற புகழார்ந்த பண்டை இலக்கியப் பற்ருளரின் ஊகம் ஆகும். மற்ருெரு விளக்கம் பின்வருமாறு அமைகின்றது: தஞ்சை சரபோஜி அரசர் நூலகத்தில் கிடைத்த பதின் மூன்று ஒலைச்சுவடி ஏடுகளில் சில அரங்கநாதர் என்ற பெயரைக் குறிப்பிடுகின்றன; மற்றவை புத்தபூபாலர் என்ற பெயரைச் சுட்டுகின்றன. சில ஏடுகளின் ஒவ்வொன்றின் ஆறுகாண்டங் களின் இறுதியில் காணப்பெறும் செய்யுட்களிலிருந்து டாக்டர் இராமலிங்கா ரெட்டி இந்த ஏடு குப்பய மந்திரி என்ற பார்ப்பன ஏடெழுதுவோரால் தயாரிக்கப்பெற்றது என்று முடிவு கட்டினர். இந்தக் குப்பய மந்திரி என்பார் சாகஜி (1684-1712) என்ற மராட் டிய அரசரின் நூலகத்தில் பணிபுரிந்தவர். ஆர்வம் மிகுந்த இராம பக்தராகிய அரங்கய்யா என்பாரின் கட்டளைப்படி இந்த ஏடெழுதும் பணியை மேற்கொண்டார். இதனால், உண்மையான நூலாசிரியர் கோனபுத்த ரெட்டியாக இருந்தபோதிலும், இந்த இலக்கியம் அரங்கய்யா என்ற பெயரையும் ஏற்று அரங்கநாத இராமாயணம் என்ற பெயரைப் பெற்றிருத்தல் கூடும் என்று டாக்டர் ரெட்டி ஒரு முடிவுக்கு வந்தார். ஆசிரியரை இனங் கண்டறிந்ததில் இவர் அதிகப் பணயம் வைக்கின்ருர். ஆராய்ச்சியாளர்களிடையே இந்தக் கொள்கை எல்லாவற் றையும் உட்படுத்திய கருத்தொற்றுமையைப் பெற இயலவில்லை. இன்றுவரையிலும் இந்தப் பொருளில் இதுதான் இறுதியான முடிவு என்று எவரும் உரிமை கொண்டாட முடியவில்லை. எனினும், நூலின் அழகு பற்றியும் நூலாசிரியரின் பிறிதின் சார் பற்ற தன்மையைப்பற்றியும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் எழவே இல்லை. பி. செஞ்சய்யா என்பரால் எழுதப்பெற்ற (1928) தெலுங்கு இலக்கிய வரலாறு என்ற நூலின் அணிந்துரையில் டாக்டர் இராமலிங்கா ரெட்டி கூறியுள்ள கருத்தின் போக்கினை பெரும்பான்மையான படிப்போர்கள் முழுமனத்துடன் ஆதரித் துள்ளார்கள்: ஆந்திரத்தில் பல வால்மீகி இராமாயணங்கள் உள் ளன; ஆனால் கோன புத்தா ரெட்டி எழுதிய ஒரே ஒரு தெலுங்கு இராமாயணம்தான் உள்ளது. வால்மீகியின் காவி யத்தில் பாமர மக்களிடையே வழங்கும் கட்டுக்கதைகளை வியக்கத்தக்க கலையார்வத்துடனும் ஆற்றலுடனும் இவர் இணைத்துள்ள அழகு என்னே! தன்னுடைய தெலுங்கு