பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வாளர் 53 சிறப்புத் தன்மையால் அந்தக் கவிதையின் உருவத்தையே மாற்றியமைத்துவிட்டார் என்று சொல்லலாம். தெலுங்கு மொழியில் இதைவிடப் பொது விருப்பான அல்லது சிறந்த கவிதை வடிவம் இல்லையென்றே கூறலாம். இதன் உணர்ச்சிவயமான கனிவா ற் ற ல் ஆர்வமூட்டுவதாகவும் எதிர்த்து வெல்ல முடியாததாகவும் அமைந்துள்ளது. இதனை டாக்டர் ரெட்டி மொழிபெயர்ப்புக்கும் மேற்பட்ட நூல் என்றே கருதுகின்ருர். பல பகுதியில் இது படைப்பிலக்கியத் திற்கும் அப்பாற்பட்டதாகத் திகழ்கின்றது. இந்த இராமா யணத்தில் பிறிதின் சார்பற்ற தாயக மூலங்களாகக் கருதுபவற்றை டாக்டர் ரெட்டி அட்டவணைப்படுத்தி அடியிற்கண்டவாறு குறிப் பிடுவர்: 1. ஆரணிய காண்டத்தில் மூங்கிற் புதரிலிருந்த அரக்கன் ஒருவனே இலக்குவன் வதைத்தல்; இராவணனுக்கு நற்பயன் விளைவிக்கும் முறையில் அறி வுரை கூறும் இராவணனின் அன்னையையும் அறிவுரை வழங்கும் அவளுடைய முனிபுங்கவர்களையும் நுழைத்தல்; 3. சுலோசவிைன் மிகவும் இரங்கத்தக்க கிளைக் கதை: 4. அநுமன் சஞ்சீவி மருந்தினைத் தேடுவதில் தொடர் பான நிகழ்ச்சி; 5. இராவணனின் பாதாள ஹோமம்; 6. இராமேச்சுவரத்தைப்பற்றிய புராணக் கதைகள். ஒளிர்கின்ற புதிய வடிவத்தில் பிரகாசிக்கச் செய்வதற்காக இராமாயணப் பாத்திரங்களைச் சீர்திருத்தி அமைத்த இந்த இராமாயண நூலாசிரியரின் சிறப்புத் தன்மையைப் புகழ்ந்து பாராட்டும் டாக்டர் ரெட்டி கவனத்தை ஈர்க்கும் இராவண பாத் திரத்தைப்பற்றிச் சிறிது தயக்கம் கொள்ளுகின்ருர்: 2 இராவணன் வெறும் ஒர் அரக்கன் என்ற அளவில் நின்றுவிடவில்லை; இவன் ஒழுக்கத்துறையில் ஒரு புதிராகவே அமைகின்ருன். சீதையைக் கடத்திச் சென்றதில் இவனு டைய உள்ளெண்ணம்தான் என்ன? சிற்றின்பத்தை நுகரவும் வஞ்சம் தீர்த் துக் கொள்வதால் நேரிடும் மகிழ்ச்சியைத் துய்க்கவும்தான் இங்ங்ணம் செய்தான் என்பது வழக்கமாகக் கூறும் வரலாறு ஆகும். ஆனல், காமமாகிய இருண்ட புலத்தினு டே திருட்டுத்தனமாக விட்டுவிட்டு ஒளிரும் ஆன்மிக உள்ளெண்ணத்தின் ஒளியை, கோன புத்தர் புலப் படச் செய்கின்ருர், இராவணன் கடவுளின் கைகளினல் இறப்பையும் இறவா இன்பத்தைத் தரும் வீடு பேற்றையும் 4