பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் சி. ஆர். ரெட்டி அடையலாம் என்றும், இகலோக வாழ்வை முடித்துக் கொண்டு இறைவனைக் காணும் நேர் காட்சியில் திரும்பவும் சேர்ந்துவிடலாம் என்றும் நன்கு ஆராய்ந்தே இராமனுடன் போரைத் துாண்டுகின்ருன் . கும்பகர்ணன் வீடணனுக்கு வழங்கிய இறுதி உரை வியக் கத்தக்க அழகும் இரக்க உணர்வும் கொண்ட பகுதியாகும்' என்று வாழ்த்துரை வழங்கிவிட்டு டாக்டர் ரெட்டி முடிவுரையாகக் கூறுவது: மொத்தத்தில், கோன புத்தர் வால்மீகியை மொழி பெயர்த்தார் என்று சொல்லுவதைவிட ஆந்திர நாட்டுப் புறப் பெருமக்களின் வியக்கத்தக்க அருமை வாய்ந்த கற் பனையை வாங்கித் தம் காவியத்தில் ஏற்றியுள்ளார் என்று கூறுவதுதான் சாலச் சிறந்தது. அரங்கநாத இராமாயணம் என்ற காவியம் மேற்கு ஆந்திரா வின் இலக்கியக் கருவூலங்களில் ஒன்று என்று டாக்டர் இராமலிங்கா ரெட்டி உரிமை கொண்டாடுகின்ருர். மற்றவற்றுள் பலா காட்டி வீரசரித்திரமு, காட்டமராஜு கதா போன்ற கதை பொதி நாட்டுப் பாடல்களையும், பல்வேறு யட்சகானங்கள், ஈரடிச் செய்யுள் இலக்கியங்களையும் (துவிபாதங்கள்), வீர சைவ இலக்கியத்தில் பெரும்பகுதியையும் சேர்த்துக் கொண்டுள்ளார். சமூகச் சீர்திருத்தத்தில் வருவதுரைக்கவல்ல நுண் நோக்கையும் ஆர்வத்தையும் வேமனர், போட்டுலூரி வீர பிரம்மம் ஆகிய இரண்டு பெரிய ஞானக்-கவிஞர்களும் இந்தப் பகுதியினின்றே தோன்றினர். பொதுமக்கட்கு உணர்வூட்டும் பொது விருப்பான தெலுங்கு இலக்கியம் (தேசி வகை) இராயர் சீமை (வழங்கப் பெற்ற மாவட்டங்கள்"), தெலிங்கான ஆகிய பகுதிகள் உட் பட்ட மேற்கு ஆந்திராவில்தான் செழிப்பாக வளர்ந்தது என் பதும், கற்ருேர்க்கு விருப்பார்வமூட்டும் புலமை சான்ற இலக்கி யம் (மார்க்க வகை) கிழக்கு ஆந்திராவில் (சர்க்கார் மாவட்டங் கள்) தோன்றி வளர்ந்தது என்பதும் டாக்டர் ரெட்டி கொண்ட கொள்கையின் ஒரு பகுதியாகும். இத்தகைய வேறுபட்ட வளர்ச் சிக்குக் காரணங்களை ஆராயும் டாக்டர் ரெட்டி, அந்த இரண்டு பகுதிகளின் சமூக-பண்பாட்டுப் பின்னணிக்குள் துழைந்து காண்கின்ருர்: ஏதாவது வேற்றுமை காணப்பெறுமாயின், பெரும் பாலும் தம்முடைய திராவிடப் பண்பையும் தனித்தன்மை யையும் விடாமல் கொண்டிருக்கும் மேற்குப் பகுதிகளையும்