பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வாளர் 55 எளிதில் அணுக முடியாத சில பகுதிகளையும் விட கரையோர மாவட்டங்கள் இயல்பாகவும் அதிகம் முழுநிறைவாகவும் ஆரியப் பண்பைத் தழுவிக்கொண்டதன லாகும் என்று நான் கருதுகின்றேன். இந்த வேற்றுமை இந்த இரு பகுதி களிலும் தோன்றியுள்ள இலக்கியத்திலும் பிரதிபலித்துக் காட்டுகின்றதென்பதாக எனக்குத் தோன்றுகின்றது. பரந்த நோக்கத்தில் எடுத்துக் காட்டினல் அண்மைக் காலம் வரை யிலும் இக்கால நாகரிகம் மக்கள் மனத்திலும் மனப்பான் மையிலும் பயனை விளைவிக்கும்பொழுது சர்க்கார் பகுதியில் தோன்றின இலக்கியம் முக்கியமாக வடமொழியின் மொழி பெயர்ப்புகளும் அதன் மற்றைய தழுவல்களுமாக அமைந் தது; ஆனால் மேற்கு ஆந்திராவின் இலக்கியம் அதிகமாக உள்நாட்டு மனநிலையையும் உரமான தனித் தன்மையையும் கொண்டு இலங்குகின்றது. உள்ளுர்ப் பற்றின் தாயகமூலம் மனம் அறிந்தோ அறியா மலோ கடந்த கால இலக்கிய மரபுரிமையைப்பற்றிய டாக்டர் ரெட்டியின் பகுப்பாராய்ச்சியில் இடம் பெற்றுவிட்டால், அது முற்றிலும் தெரிந்துகொள்ளக் கூடியதுதான். உண்மையில் இத் தகைய மேலீடான மன உணர்ச்சிகள் அவர் இங்கிலாந்தில் வாழ்ந்த காலத்தில் நாட்டுத் தலைவர்களிடம் பொதுவாகக் காணப்பெறும் உணர்ச்சிகளே என்று பிறிதோரிடத்தில் கூறு கின்ருர். அவர் காலத்தில் எஸ்ஸெக்ஸ், சஸ்ஸெக்ஸ், மிடில் ஸெக்ஸ், வார்விக்ஷயர், குளோசெஸ்டர்ஷயர் போன்ற பகுதி களில் வாழ்ந்தவர்களிடம் உள்ளுர்ப் பற்றின் காரணமாக இத் தகைய உணர்ச்சிகள் காணப்பெற்றனவாகக் கூறியுள்ளார். அவை மக்களினுடையவும் பொருள்களினுடையவுமான பெரிய நாட்டுத் தொலைநோக்கில் தலையிடாதவரையில் தீது விளையாதிருந்தன. ஆந்திராவில் சமகாலத்து நிலையைப்பற்றிய அவர்தம் விளக்கக் குறிப்பிலிருந்து டாக்டர் ரெட்டி இலக்கியம் வரலாறு போன்ற பொருள்களில் தம் மதிப்பீட்டை நுழைக்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகப் புலனுகின்றது: இன்று நிகழ்ச்சிகள் மாறுபாடாக உள்ளன. பண் பாட்டு நிலையில் பார்க்குமிடத்து கடற்கரையோர மாவட் டங்களில் புதிதான செல்வாக்குகள் எளிதில் எட்டக்கூடிய நிலையிலிருப்பதால், அவை மேலேறும் நிலையில் உள்ளன. சமூகச் சீர்திருத்தத்திற்கும் ஏனைய தேசிய இயக்கங்கட்கும் தாயகமாகத் திகழ்கின்றன. இலக்கியத்தில், தனிச்சிறப் புடைய கலையின் நெறிகளிலும் முறைகளிலும் கூட, அவை