பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர் சி. ஆர். ரெட்டி புதிய வகையினையும் அழகினையும் தோற்றுவிக்கின்றன. ஒரு பக்கம் ஐரோப்பிய நாகரிகமும் மற்ருெரு பக்கம் வங்காள இயக்கம், ஏனைய புது மலர்ச்சி இயக்கம் ஆகியவற்றின் செல்வாக்கின்கீழும் இவை அதிக முழுநிறைவாக அமைந்து விட்டன; அதன் காரணமாக, பொருளாதார அடிப்படை யிலாயினும் சரி, ஒழுக்க நேர்மை அடிப்படையிலாயினும் சரி, வாழ்க்கைக் கவர்ச்சிகளிலும் பொதுப் பண்பாட்டு முன்னேற்றத்திலும், இவை உயர்ந்த மதிப்பு வாய்ந்த இடத் தைப் பிடித்துக்கொண்டுள்ளன. வட்டாரச் சலுகைகள் எப்படியிருந்தபோதிலும் பொதுவாக இக்காலத் தெலுங்கு இலக்கியத்தைப்பற்றிப் பேசும் டாக்டர் ரெட்டி, பிரபந்தங்களின் காலமாகிய இடைக்காலத்தில் மூழ்கிப் போன செயற்கைத் தன்மையும் தளர்ச்சியும் நிறைந்த பழி கேடான பள்ளத்தினின்றும் அஃது எழுந்துவிட்டதைக் கண்டு தம் மகிழ்ச்சியை தெரிவித்தார். வடிவத்திலும் மொழியிலும் டாக்டர் ரெட்டி தவறுக்கு வருந்தாத ஒரு பண்டைய இலக்கிய விரும்பியாக இருந்தபோதிலும், குழப்பத்தை விளைவிக்கக் கூடிய ஏராளமாகப் பூத்துக் குலுங்கும் புதிய வடிவங்களால் அவர் மிகவும் உற்சாகம் அடைந்தார்: உற்று நோக்கலில் துணிகரமாக நான் செயற்பட்டதால், உரமான நாட்டுணர்ச்சி, வங்காள இலக்கியம் இவற்றின் செல்வாக்கால், தெலுங்கு ஆன்மா தன்னுடைய இலக்கியத் தில் தன்னைக் காணத் தொடங்கியுள்ளது; பல்வேறு வகை யான மனப்போக்குகளிலும் அழுத்த நிலைகளிலும் தன்னை உணர்த்தவும் தொடங்கியுள்ளது என்று சற்று மிகுதியாகவே கருதுகின்றேன். சமகாலத்திய தனித்திறமை மிக்க மனிதர் களின் தொகையும் மிகப் பெருகியுள்ளது; அவர்களால் இயற்றப்பெற்று, இலக்கிய வகைகளின் தொகையும் அங் ங்னமே மிகவும் பெருகியுள்ளது. சொற்ருெடரில் எளிமை, உணர்ச்சியில் நேர்மை, இயல்பான தன்மை நவிற்சி அணிகள் ஆகியவை மீண்டும் பரந்த வழக்கிலுள்ள இலக்கிய முறை யாக வந்து கொண்டுள்ளன; நம்முடைய இலக்கியம் பிரபந்த காலத்தின் இயற்கைக்கு மாருத தன்மைகளினின்றும் தனி முரண்பாடுகளினின்றும் விடுதலைபெற்று வெளிவந்துள்ளது. பொதுவாகக் கூறுமிடத்து இப்பிரபந்தக் காலமே நம் இலக் கியம் தளர்வுற்ற காலமாகும். நன்னம்பிக்கைகொண்ட அதே மன நிலையில் தொடரும் டாக்டர் ரெட்டி நடைமுறைப் பயனுக்குகந்த கருத்தைத் தெரி விக்கின்ருர்: